Monday, October 24, 2011

என் பிறப்பு...ஏதோ எனக்கானவன்
நீ
என்பதால்
அதிகம் 
உரிமை 
எடுத்துக்கொள்கிறது
மனம்...

எனக்கான
சோகங்களை நீ சுமந்து
உனக்கான சிரிப்பை
தந்தாய்
என் உதட்டில்...

 
காதல்
தான் எனக்கு உன்மீது-
காதல் கடந்த
நேசம்
உனக்கு என்மீது..

 
காலங்கள்
தொலைந்தாலும்
கண்ணாளா
உன் அன்பில்
வேண்டும் 
என் பிறப்பு...