Monday, May 28, 2012

வைத்த பாசம் பொய்த்துப் போனது ...ஏதேதோ எண்ணங்கள்
பிரிவை உணர்த்திவிட
எங்கெங்கோ அலையும்
என் மனம்..

மௌனமாய்
உணர்வுக்குள் அழுது
உதட்டில்
சிரிக்கிறேன்...

என்றோ
சிதைந்துபோன
மனதை
நீ பண்படுத்தியது-
இன்று அதை
புண்படுத்துவதற்காகவா..?

உன் ஒற்றை வார்த்தையில்
கருவானவளை
சில நொடிப் பிரிவில்
சிதைத்துவிட்டாயே..!
ஏன்? ஏன்? ஏன்?

சிந்திய
கண்ணீருக்கும்
சிதைந்துபோன
என் உள்ளத்திற்கும்
சொல்வாயா உன்
சித்தாந்தத்தை..?முன்பு
ஏமாற்றம் ஒன்றே
வாழ்க்கையானது!
இன்று
ஏக்கம் என்பதே
ஸ்வாஸமானது

நீ
கூறிய வார்த்தைகள்
கனவானதடி
இன்று- என்னில்..

கடந்துபோன
நேரங்கள்
கனவாய்
கொல்லுதடி
என்னுள்ளே...

நிகழ்ந்தவையெல்லாம்
கனவாயாகக் கூடாதா..?

வாழ்வின்
இடையில் வந்தாய்-
என் வாழ்க்கை
மலரும் முன்னே
சென்றாயே..

உன்னோடு
கதைபேசி
நானிருந்த நேரங்களின்
வலிகளை உணர்கிறேன்
இன்று..

உன்னோடு கதைபேச
உரிமையில்லை
என்னிடம்..

உன்னோடு
தொடர்ந்து வர
உள்ளமுமில்லை
என்னிடம்...

ஆனால்
நீ விட்டுச்சென்ற
தடயமாக
அக்கா
உன் ஞாபகங்கள்
மட்டும் என்னுள்ளே..!Friday, May 18, 2012

எழுச்சி..!மெல்லிசையின் கீதத்தில்
மௌனமாய் உன்
நினைவு..

மறைக்கப்பட்ட 
தனிமைக்குள்
மறுதலையாய்
உன் விம்பம்..

மனதின் ஆசைகள்
விழிகளில்
நீராகி
தலையணை நனையும்
தவிப்புகள் 
தொடரும்..

காதல் தொட்டு
காமம் கடந்து
தாய்மையாகி
தாலாட்டும் உன் அன்பு..

தனித்திருக்கும்
பொழுதுகளில்
கவியாகி
எழுதிடும்
உன் நினைவு...

சமூகத்தால்
உணர்வுகள்
சிதைக்கப்படும் வேளை
எழுச்சிகீதம் பாடும்
உன் உரிமை
என்னுள்..

தோல்வி பல 
வந்தாலும்
நெருக்கமான
உன் அன்பால்
தொலைவாகிடும்
சோகங்கள்..

துணிந்துவிட்டேன்
எழுவதற்கு..
உன் துணை
என்னுடன் இருக்கையிலே...! 

Wednesday, May 16, 2012

தனிமையின் நகர்வு..♥ தனிமையின் நகர்வுகளை
கவிதையாக்கி
காத்திருக்கும் வேளையிலும்
காதலுடன் 
நீ பேசி
புன்னகைக்கும்
பொழுதினிலும்
அன்பனே
உன் தோள் சாய்ந்து
துயரம் மறக்கும்
இனிமையிலும்
வாழ்வின் அர்த்தத்தை
ஒருநொடியில் உணர்கிறேன்..
உன் வரவின் 
வசந்தத்தில் மலர்கிறேன்... ♥ 

Tuesday, May 15, 2012

உன்னை கண் தேடுதே....
விழியோரம் நீர் கசிந்து
விழிகள் நனையுதே..
சூழ்ந்துவிட்ட தனிமையும்-
மறந்துபோன இனிமையும்
மாசற்ற உன் அன்பில்
நேசம் காணுதே..


உன்
அன்பான காதலும்
பண்பான நேசமும்
தேகம் விட்டுச் சென்றாலும்
என்னுள் வாழுமே..


மன்னவனே,
உந்தன்
மார்பினில்சாய்ந்தபடி
மனதில் உன்
இனிமை சுமந்து
என்
மூச்சுக்காற்றைநிறுத்திட தோணுதே..


வைகறையினிலும்
அந்தி சிந்தும் வேளையிலும்
அன்பனே
உந்தன் முகம்
பார்த்திட ஏங்குதே...


தொலைவான
வாழ்க்கையெண்ணி
தொலைந்துபோன
சோகங்களை தொட்டெடுத்து
உன்னோடுவாழ்ந்திட எண்ணுதே..


தினம் தினம்நாடும்
திவ்ய தரிசனமாய்
தித்திக்கும் உன் முகம்
என்னுள் மலருதே..


ஏக்கங்கள்
கூடிநிற்க
என்னுள்ளே
பல கனவு
பார்த்து-காத்து இருக்கையிலே
உன்னை கண் தேடுதே...!!!

Tuesday, May 1, 2012

சபிக்கப்பட்ட வாழ்க்கை...
விழிகளின்
தொலைவுகள்
வழியே
கனவுகளின்
காலஎல்லை..

மௌனத்தின்
ஸ்வரத்தினிலே
மாயத்தின்
மனவலைகள்..

வாழ்வியலில்
தொலைந்த
வசந்தம்
மீண்டும்
பூக்குமென
எண்ணங்கள்...

சிதைக்கப்பட்ட
நினைவுகளில்
சித்திரமாய் பல
வலிகள்...

காலத்தின்
வேதனையில்
கவிகளின்
காதல் இங்கே..

மௌனித்த நாதத்துள்
இசைக்கீறலாய்
ஓர்
அழுகுரல் ஒலித்திட...

விதி எனும் விதைக்குள்
அறையப்பட்ட ஆணியாக
நகர்கிறது
இந்நாட்கள்..

நிர்க்கதியாகி
நடைபிணமான
உடலைச் சுமந்து
காட்டுவழியில் ஓர்
பயணம்..

இசையாகிக் கசிவதற்குள்
விறகாகி தணலான
மூங்கில் களியொன்று
மூர்ச்சையாகிறது இங்கு..

விதைக்கப்பட்ட விதைகள்
முளைகளிலே கருகிப்போக
சப்பித் துப்பப்பட்டு
சபிக்கப்படுகிறது இங்கே ஓர் வாழ்க்கை...