Monday, November 28, 2011

உணர்வோரம்...



நிலவின் 
ஒளிதனிலே
இதழோரம்
கதை படிக்கலாம்...


கனவின்
இதத்தினிலே
உணர்வோரம்
கவி வடிக்கலாம்...


என்னவனே,
என்றும்- உன்
தோள்தனில்
நான் சாய்ந்தால்...!

Sunday, November 27, 2011

என்னுடன்....?


இழப்பதற்கு ஏதுமில்லை...



சுவாசத்தில்
நிறைந்தது
வீரம்..

செங்குருதி
செழித்தது
வீரத்தில்...

இழப்பிற்கு
பல இருந்தாலும்
இழக்க மறுப்பது
மானத்தை..

கண்களிலே
அனல் தெறிக்க
சித்தம் நினைப்பது
தன் சுற்றத்தை..

உயிர் இழப்பினும்
மாறாதது வீரம்
மனம் மறப்பினும்
நினைப்பது மானம்...

இனி
இழப்பதற்கும்
ஏதுமில்லை-இருந்தும்
தலை தாழவில்லை...!

Saturday, November 26, 2011

துணை...


மலர்..


உன் விழியோரம்
நானிருந்து
கதை படிக்கும்
நேரம்
என் மனதோரம்
கானகுயில்
கவி பாடும்..


உன் மொழியோரம்
நான் மயங்கும்
நேரம்
என் உணர்வோரம்
உன் சுகந்தம்
பூக்கும்..


காதலா,
உன்னை 
கடவுளாய்
ஏற்கிறேன் -
உனக்கான
பூஜை மலராய்
நான் வேண்டுமென்பதால்...!!!

Sunday, November 20, 2011

சின்னவனே...

 

சின்னவனே,
உன் ஸ்பரிசம்
மலரினும்
மென்மையோ...

உன் 
செல்ல சிணுங்கல்கள்
சின்ன குறும்புகள்..

உயிர்வரை
ஜனிக்கிறதே
என்ன மாயமோ...

குழந்தை
ஒன்றின்
நாதம்
இதயத்தின்
சங்கீதம்...


அழகின்
சொப்பனங்கள்
உன்னுள்ளே
அடங்கியதோ..

தத்தும்
தாவும்
உன் 
பிஞ்சு பாதம்...

சின்னக்
கண்கள்
சிட்டாய் 
துடிக்கும்..

தொட்டு
பார்க்கும்
உன்
சின்ன கரம்...

சிங்காரக் கண்ணா
சித்தத்தில்
நிறைந்தாயே..

உன்
மொழியின்
இனிமையிலே
சோகம்
மறக்கிறேன்
நான்....!

நட்பின் நிஜம்..



 நட்பு - நண்பர்கள்
பலவிதங்களில்..
பல ரகங்களில்..

தன் நட்பிற்காய்
உயிரையும் 
விடுபவன்
ஒரு 
ரகம்...

தனக்காய்
நட்புக்கொள்பவன்
ஒரு 
ரகம்..

நட்புக்கூட
கற்பை 
போன்றது-
களங்கப்பட்டால்
பெறுமதியற்றதாகிடும்..

நட்புக்கூட
உயிரை 
போன்றது-
தோழமையின்
உயிர்
பேணுவதால்....

சரித்திர நண்பர்கள்
கன்னனும்-துரியனும்..

இன்று
அந்த வகையில்
யாருமில்லை...

நட்பை
பேணு..
உண்மையாயிரு-
நட்பும்
இருக்கும்
உன்னோடு
என்றும்
உண்மையாய்...!!

Wednesday, November 16, 2011

நம் வாழ்க்கை காத்திருக்கும்...

உந்தன்
அன்பின்
மடிதனிலே
உருகிட
வேண்டும்
என்றும்
நான்...

இளமையின்
தனிமையும்-
இனிய
உன்
வசந்தமும்
என்றென்றும் 
வேண்டும்
எனக்காக..

காதலின்
இனிமைக்கும்
தனிமையின்
வசந்தத்திற்கும்
அழகாய்
ஒரு
வீடு
செய்வோம்- அதில்
நீயும்- நானும்
வாழ்வதற்காய்..

 நமக்காய்
நாம்
வாழும் வாழ்வில்
எமக்கான
இனிமைகள்
சின்ன சின்ன
குறும்புகள்
செல்ல சிணுங்கல்கள்
குட்டி சண்டைகள்...

நமக்காய்
ஒரு சிறு
வீடு..
அதில்
நறுமண
மலர்த்தோட்டம்..
வாழ்க்கை
சுகமாகும்
என்றும்
இன்பத்தின்
மடியினிலே...

யாருமற்ற தனிமையிலே
உன்னருகில்
நானும்
என்னருகில்
நீயுமிருக்க
நமக்காய்
நம் வாழ்க்கை
காத்திருக்கும்...




Tuesday, November 15, 2011

என்தோட்டத்து றோஜா மலர்கள்

 

என்
தோட்டத்தில்
நட்டுவைத்த
றோஜா மலர்களில்
என்றுமே
வண்ண மலர்கள்
பூத்ததில்லை..


மாறாக,
இன்று
வண்ண மலர்களும்
வாச மலர்களும்
புதிதாய்
பூக்கின்ற
மாயம்
என்னவோ??

காதலின்
வேரிலே
பூத்த
குறிஞ்சிப்பூவாய்
நீ கிடைத்தாய்
இன்று..!

காலங்கள்
மறைந்தாலும்
அன்பே,
நாம் கொண்ட
காதல்
மறையாது - என்றும்
என்தோட்டத்து
றோஜா மலர்கள்
வாடாது....!!!



பனித்தீவில்..


வெண் பனியின்
குளிர் மென்மை
குளிர் தென்றலின்
இதத்தின் சுகம்..


மனதினில்
மகிழ்ச்சி 
பொங்கும்
பனிக்கால
மேகங்கள்...


பனித்துளியின்
தழுவல்கள்
என்னோடு
கதைபேசும்- உந்தன்
கண்ஜாடை காட்டி..


இளைய மனது
இன்பத்தில்
மிதந்து
சிறகடிக்கும்- உன்
இதயமெனும்
ஆழ் கடலில்..

மண்மீது
பனி தூவும்..
என் மீது- உன்
மௌனம் 
பேசும்....

பனிக்கால
குளிர் 
இதத்தில்
உந்தன்
பனித்தீவில்
படகானேன் 
நான்...!!!


Sunday, November 13, 2011

நரம்பறுந்த வீணை..

 

கறை படிந்த
இவ் வாழ்வில்
தனிமையே
துணையாய்
எனக்கு...


தனிமையின்
துணையில்
இன்று- நான்
தொலைத்தவற்றை
மீட்டுகின்றேன்...

நரம்பறுந்த
வீணைபோல
நாதம் இன்றி
தவிக்கின்றேன்...


தனிமையின்
வேதனைக்கு
துணையாக
இன்று- இயற்கை
மட்டும்
என்னுடன்....






Saturday, November 12, 2011

அந்த பட்டாம்பூச்சி

 


என்றோ
என்னை விட்டு
பறந்துபோனது
அந்த
பட்டாம்பூச்சி..

அன்றே
தொலைந்துபோனது
என்
கனவின்
சுகம்...

சுகமற்ற
வாழ்விலே
நிலையற்று
நானின்று
நிர்கதியான
பொழுதுகள்
பல...

விழி நீர்
வழிந்து
விடைகாணா
பொழுதுகள்
சில...

மௌனங்களின்
வலிமையைவிட
புரியாத
அந்த வார்த்தைகளின்
வலிகள்
எத்தனையோ..

எண்ணிப்பார்த்தும்
முடியவில்லை
எண்ணாமலிருக்கவும்
இயலவில்லை...

ஏதோ
இன்றும்
என் வாழ்வைவிட்டு
என்றோ தொலைந்த
மகிழ்ச்சியெனும்
அந்த
பட்டாம்பூச்சியை
எண்ணியவளாய்...!

விழிக்குள்...!


 
காத்திருந்த
நேங்களில்
கனவுகளின்
தனிமைக்கு
துணையானவள்
நீயடி....!

உனக்கான
என்
கனவுகளில்
உன்னை
தேடி
விழிக்கிறேன்..!

நீயோ
என்
விழிக்குள்
விழுந்து
எழுகிறாய்...!

Thursday, November 10, 2011

அன்பே உனக்காய்...



விழி வழியே
வலிகளாய்
விழிநீர்
வழிந்தது...

கன்னங்களின்வழி
சிதறி- என்
மனதிலிருந்த
உன்னை நனைத்தது...


உன் புன்னகை
சிதயக்கூடாது
என்பதற்காய்

என்
ஸ்வாசம் 
அதை உலர்த்தி

இதழ் வழியே
புன்னகையாய்
மலரவிட
எத்தனிக்கிறது....

Wednesday, November 9, 2011

முன்னைய தனிமை..


நிசப்தம் 
சூழ்ந்த
இரவிலே
முன்னைய 
தனிமைதான்
இன்றும்- பல 
 நாட்களின் பின்
நிரந்தரமாய்
என்னுடன்...


ஆனால்,
கைத்தொலைபேசியில்
உன்
நிழற்படத்தோடு
விழியில்
வழியும்
கண் நீருடனும்..

Tuesday, November 8, 2011

வேண்டுதல்..!


உனக்கான
வலிகளை
நான்
சுமக்கிறேன்..


எனக்கான
இதயத்தை
எடுத்துக்கொண்டவன்
 நீ
என்பதால்
மட்டுமல்ல..


நான்
உன் 
தாயும்
என்பதால்...


எனக்கான
மகிழ்வுகளை
உனக்காய்
பரிசளிக்க
விரும்புகிறேன்...


நான்
உன் தாயானவள்
என்பதால்
மட்டுமல்ல..


உனக்கான
உன்னவளும்
நான் தான்
என்பதனால்..


ஏற்றுக்கொள்
என்னவனே- உன்
உதட்டில் சுகிக்கவும்
உள்ளத்தில்
வளர்க்கவும்
இப் புன்னகைகளை...



ஏற்பாயா..
உனக்கான
என் 
வேண்டுதலை...???
                                                                         

Wednesday, November 2, 2011

விழிகள் குளமாகிட..

உனது வருகைக்காய் 
ஏங்கும் மனதுக்கு 
உன் சிறு பிரிவைக்கூட
தாங்க சக்தியில்லை..
நீ வரும்போது 
துள்ளிக்குதிக்கும்
இந்த இதயம்- நீ 
செல்லும்போது 
துடிப்பற்று நின்று விடுகிறதே..
உன் வரவை எண்ணி 
மலரும் விழிகள்- நீ
செல்லும் பொழுதினில் 
விழிநீர் உதிர்த்து 
வாடுகிறதே கண்ணா..
உன்னோடு நானிருக்கும் 
நேரங்ள் அத்தனையும் 
என் கல்லறை வரை 
அழியாது- அழிக்கமுடியதது..
உன்னோடு இருக்கும் 
அந்த நேரங்களுக்காய்
தினமும் தவிக்கும் மனதுடனும் 
நீர் சிந்தும் விழியுடனும் 
காத்திருப்பாள் இவள் - என்றும் 
உன்னை எண்ணி வாழும் உன்னவளாய்..
சென்றுவா விரைவில் உனக்கான ராதையிடம்..
அவள் காத்திருப்பாள்- விழிகள் குளமாகிட..

                                                                       

Tuesday, November 1, 2011

இவள் உன்னவள் ...


நாட்களின் விடியல் 
என்றும் 
என் வாழ்வில்
உன்னை 
எதிர்பார்த்தே 
மலர்ந்திடும்..
என் 
விழிகளின் 
தேடலில் 
விழுந்து 
எழுபவன் நீ..
உள்ளத்தின் 
உணர்வுகள் 
தவிப்பது 
உன் 
ஸ்பரிசத்திற்காய்..
என் 
மௌனங்கள் 
கூட 
இசையமைக்கும்
உன் ஸ்வாசம்
தொட்டால்..
உனது 
வருகைக்கான 
காத்திருப்புக்கள் 
கூட 
தாலாட்டுத்தான் 
என் ஏக்கத்திற்கு..
நீ கூட 
ஓர் குழந்தைதான்- உன் 
தாயாக நான் மாறியதால்..
என்னவனே,
நான் கூட 
உன் பிள்ளையாக 
வேண்டுமடா- இவள் 
உன்னவள் என்பதால்...