Monday, October 31, 2011

♥என் கவிகள்..!♥

 
கவிகளின்
 
புதிய 
பரிணாமம்..
 
காவியங்களின்
 
புதிய 
அடிவாரம்...
 
எண்ணத்தின்
 
இனிய
பகிர்வுகள் இவை...! -
♥என் கவிகள்..!

உணர்வுகள் விழிக்கும்..!

 
காதலர்களின் தனிமைக்கு
கவிபாடும் நிலவிருந்தால்
ரணங்கள் கூட
இனிமையாகுமே..

குவலயத்தின்
இருள் தனிலே
குளிர் நிலாவின் மடியினிலே
தூங்கு நீ - அமைதியாக..

இருளை கிழித்து
தன்னொளி வீசுகையில்
உள்ளம் உறங்கும்- ஆனால்
உணர்வுகள் விழிக்கும்..!

என் நிலை

 
தண்ணீரில் 
மீன் 
அழுதால்
 
கண்ணீரை 
யார் 
அறிவார்...!
 
என்
நிலையும் 
அதுபோல தானோ..?

♥ நினைவில்..

இன்றைய 
விடியலை
 
எண்ணித்தான்..
 
இத்தனை 
நாட்களாய்
 
காத்திருந்தேன்...
அழகான
 
பொழுதுகள் 
அவை...
 
அழகான
 
நாட்கள்
 
இவை....

உன் 
நினைவில்
 
நான் 
இருந்த
 
இனிய 
தருணங்கள்... ♥

நீ எனக்கானவன்..

 
என்னவோ 
ஒரு
 
இனம்புரியாத
 
கோபம் கலந்த
 
சோகம்....
உன்னை 
எண்ணி...!
 
நீ 
எனக்கானவன்
 
மாத்திரமே ;
 
என்
 
சொந்தம்
 
மட்டுமே
 
என்பதனால்....!!!

அந்தகாரம்..

 
நிசப்தமான 
நேரங்கள்..
 
அந்தகாரம் 
சூழ்ந்த 
இரவு..
 
தொலைவில் 
கேட்கும் அழுகுரல்..
 
தொலைந்துபோன 
என் வாழ்க்கை..
 
சுவாசிக்க மறுக்கும்
இதயம்..
 
சுமைகளை 
சுமக்கும் உணர்வு..
 
சலனமற்ற 
என் ஜீவன்..
 
இவற்றோடு-
 
சிதைந்துபோன 
என் 
புன்னகை...!

உன் வரவு..

 
என் 
விழிநீரில்
 
அனைவரும்
 
மகிழ்கின்றார்கள்...?
 
வாழவே 
பிடிக்கவில்லை..
 
எனினும்..
 
... வாழவேண்டும் 
என்ற
உன்
 
கட்டாயத்திற்காய்
 
வாழ்கிறேன்..
 
உனக்காக..!
 
விழிநீரை 
சுமந்தபடி..
 
விடியும் பொழுதில்
 
உன் வரவை 
எண்ணியவளாய்..!

என்..

 
இது.. -->>
 
நிமிடத்திற்கு
 
நிமிடம்
 
நிலைகுலைந்து
போகின்ற
 
நிதர்சனமான 
இந்த
 
நிஜங்கள் 
தொலைக்கப்பட்ட
 
(என்) வாழ்க்கை... <<<--

யாருமின்றி...!

 
என்னவோ 
புரியவில்லை...
 
எதையோ 
தொலைத்தது 
போன்ற உணர்வு..
தனியே இருந்து
 
புலம்புகின்றேன்...
 
துணை வர
 
யாருமின்றி...!
 

அழகின் இதத்தோடு..

 
அந்தியிளம் 
மாலை தனில் 
அழகின் 
இதத்தோடு சேர்த்து 
உன்னையும் 
இரசிக்கிறேன் 
இனிய உன் 
அன்பெனும் 
சுவாசத்தினால்....!
கண்ணில் 
உன் விம்பம் 
காலமெல்லாம் 
உன் சுவாசம் 
நினைவெல்லாம் 
உன் மெளனம் 
என்றும் 
என் கவியெல்லாம் 
உன் ஜீவன்..!
 

ஒரு ராதை !

 
கண்ணா 
காத்திருக்கிறாள் 
உனக்காக 
ஒரு ராதை ! 
கவிபடைத்து 
உன் மொழிக்கு 
ஏங்கியவளாக ! 
சுவாசமே நீயாகிட 
நினைவுகள் 
உன் வரமாகிட 
காதல் தனை சுமந்து 
உனக்கான 
அவள் இருப்பு 
இன்றும் தொடர்கிறது 
விழிநீர் சுமந்தவாறு...!

Sunday, October 30, 2011

உன்னைத்தேடி....


அழகிய
மழைத்துளிகள்
என்னை
தொட்டபோது
 

அன்பே,
வந்தாய்
நீ-
என்னருகில்...

 

சின்ன
மழைத்துளி
சொட்டச்சொட்ட
என்னைத்தீண்டிட
 

உன்
தீண்டலில்
உயிர்த்ததுபோன்ற
நினைவு
என்னுள்ளே...

 

முத்து
மழைத்துளி
முத்தம்
சிந்தியது
என்னுதட்டில்..

 

தொலைந்தேபோனேன்
நான்
உன்
இதழின்
அணைப்பினில்..

 

என்னுடலை
நனைத்தது
மழைத்துளியாயினும்
மன்னவனே,
உன்
நெருக்கமே
விரவியது
என்னுள்ளே...

 

மண்ணுக்கு
மழை
அருகிலிருந்ததாலும்
நான்
சிறகடித்தேன்
விண்ணின்
தனிமையில்...

 

என்னுடனான
ஒவ்வொரு
நிகழ்வுகளும்
உன்னையே
நினைவூட்ட
 

உன்
ஏக்கத்தில்
தொலைந்தவளாய்
 

உன்னைத்தேடி
இங்கு
நான்....!

இனிமை



என்னவனே,

தொலைவிலிருக்கும்

உன்னைவிட

என்னருகிலிருந்து

என்னை ஸ்பரிசித்து

என்னோடு

உறவாடும்

உன்

ஞாபகங்கள்

இனிமையானவை

எனக்கு....!



விடையற்ற வினா...



மனதிலே
ஆயிரம்
எண்ணங்கள்...
 

ஒரு நொடியில்
சிதைந்துபோகும்
மாயமென்ன...?

 
கனவுக்கோட்டைகள்
பல
சுவடுதெரியாமல்
போன மர்மமென்ன..?

 
ஏதேதோ
எண்ணங்கள்.
என்னென்னவோ
கனவுகள்...

 
மொழிதுள்ளும்
உதடுகளில்
மௌனம்
புதைகிறது..

 
எழில்கொஞ்சும்
விழிகளில்
ஏக்கம்
மலர்கிறது..

 
உள்ளத்தின்
உயிர்ப்பில்
இன்று-
உணர்வுகள்
சிலையாகிறது..

 
ஏனிந்த
சோகம்..
 
எதற்கிந்த
வேதனை....

 
விடைகாணா
பல
கேள்விகளுடனே
தொடர்கிறது
வாழ்க்கை...!

                                                                       

Saturday, October 29, 2011

அழகில்லையே...!


மழையுடன்
இதமான குளிர்
மனதிற்கு
தட்பமான சுகம்..

மழை சிந்தும்
துளியின் இசை
என்
மனதிற்கு
சங்கீதம்..

பச்சை இலை வழி
மழைத்துளி
என்
மௌனம்
களையும் மருந்து    ..

சலனமற்ற
மனதிலே
இவையனைத்தும்
உன்னை
அழைத்துவரும்
எனக்காய்..

தட்பத்தில்
வெப்பம்
உன்னை
யாசிக்க
உள்ளம் தேடியது
உன் அனைப்பினை
சுகிக்க..

அழகிய
மழைப்பொழுதுதான்
எனினும்
அழகனே-
இவை உன்னைவிட
அழகில்லையே...!    
 

Thursday, October 27, 2011

இன்றைய நாள்...



அழகிய நினைவுகள்
அவை..
இனிய நினைவுகள்
அவை..

 
உன்னோடு
நான் வரும்
கனவுப்பொழுதுகள்
என்றும் வேண்டும்
என்னோடு..

 
உன் விரல் தொட்டு
உன் கரம் கோர்த்து
உன்னை யாசித்து
உன்னுடனே தொலைவேனே..   

 
மலரும்
மலர்கள்
நம்மை
பார்த்து சிரிக்கும்..

 
வீசும்
தென்றல்
நம்மை தொட்டு
சுவைக்கும்...

 
உன் அதரத்தில்
மலரும் புன்னகை-
அதில் நான் தொலைந்ததை
நீ அறிவாயா..?

 
கன்னத்தில் தோன்றும்
உன் குழியழகின்
வசிகரம்தனில்
உள்ளம் விழுந்ததே..

 
உன் நெற்றியில்
தவளும்
கற்றை முடியழகு-
விழியோரத்தில்
வண்ணத்திரை
எனக்கு.. 


சிலபொழுதுகளில்
நம்மிடையே
மௌனங்களும்
பேசும்..

 
சில கணங்களில்
என்னிடம்
உன் கைகளும்
பேசும்...       

 
உன்
மூச்சுக்காற்றுக்கூட
இன்றைய பொழுதில்
இசையாகியது
எனக்கு...

நம்
விழிகள்
இசையோடு கலக்கும்
தருணங்களில்
ஆயிரம் கனவுகள்
என்னுள்ளே
மலர்ந்திடும்..

உன்
உடல்  மட்டுமல்ல-
உள்ளமும்
அழகு தான்..

கண்ணாளனே..-
உன் விரலின்
பனி சுகத்தையும்ம்
உன் இதழின்
இனிய வசந்தத்தையும்
சுகிக்கவேண்டும்
என்
இறுதி
மூச்சுவரை..

 
அந்த
நாட்களை
எண்ணியவாறு
கனவுகளை
சுமந்து
நான்.....!!!

                               

Wednesday, October 26, 2011

முடிவு..?



ஏதோ மனதில்
ஒரு வெறுமை..
ஏனோ விழிகளில்
ஒரு பாரம்..

 
என்றோ 
தொலைத்த
ஞாபகங்கள்
இன்றும் வந்து
இம்சை செய்திட
வாழ்க்கையே 
தொலைந்தது
போன்ற ஒரு
நினைவு..

 
வாழ்க்கையை
வெறுத்தபோது
வாழ்க்கை என்னை 
பிடித்துக்கொண்டது..                                        


வாழ்க்கையை
விரும்பும் போது
வாழ்க்கை என்னை
வெறுக்கிறதே...

 
எங்கு
செல்லும்
இப்பயணம்..?

 
முடிவு..?

                               

Tuesday, October 25, 2011

இனிய வாழ்த்துக்கள்..!



பொன்மயமாய் எங்கும்
ஜொலிக்கும்
தீபங்கள்..

வண்ணமயமாய்
ஒளிரும்
மத்தாப்புக்கள்..

தேன்
சிந்தும்
புன்னகைகள்..

தித்திப்பாகும்
அன்பின்
அரவணைப்புக்கள்...

இனிப்பான
சுவைகலந்து
இன்பங்கள்
பெருகிடும்
இனிய பருவம்..

மனதில்
மகிழ்ச்சி
பொங்கிட
வட்டமிடும்
பிஞ்சுகள்..

தேன்சிந்தும்
தித்திப்பாய்
இத் தீபத்திருநாளில்..

இனிய வாழ்த்துக்கள்
உங்களுக்காய்...
மங்களம்
பெருகட்டும்...!!



Monday, October 24, 2011

என் பிறப்பு...



ஏதோ எனக்கானவன்
நீ
என்பதால்
அதிகம் 
உரிமை 
எடுத்துக்கொள்கிறது
மனம்...

எனக்கான
சோகங்களை நீ சுமந்து
உனக்கான சிரிப்பை
தந்தாய்
என் உதட்டில்...

 
காதல்
தான் எனக்கு உன்மீது-
காதல் கடந்த
நேசம்
உனக்கு என்மீது..

 
காலங்கள்
தொலைந்தாலும்
கண்ணாளா
உன் அன்பில்
வேண்டும் 
என் பிறப்பு...                                                                       

Sunday, October 23, 2011

மரணித்தலின் ஒவ்வொரு கணமும்..



உன்னருகில் 
நானிருந்தால்
என் 
விழிகளுக்கு 
உன்னை தவிர 
வேறு எதுவுமே 
தெரிவதில்லை... 


நீ 
என்னை 
பார்க்கிறாய் 
என்பதை 
உணராதவள் 
அல்ல நான்..

 
எனினும்
விழிகளை 
உயர்த்தி 
உன்னை 
பார்ப்பதற்கு 
என்னுள் 
சக்தி எழுவதே 
இல்லை..

உன் 
ஒவ்வொரு 
அசைவுகளும்
சிதறடிக்கும் 
என் மனதை...

 
நீ
எங்கோ 
பார்க்கையில் 
உன்னை 
நாணத்துடன் 
பார்க்கும் 
என் 
விழிகள் 
உன் 
கன்னக்குழி அழகில் 
மோதி சிதைந்து போகும்..
 

உன்னை உரசும் 
காற்றுதேவன் 
என்னை 
மோதும்போது 
உடல் சிலிர்த்து நிற்கும்..
உன் கரத்துடன் 
என் கரம் 
ஸ்பரிசித்த போது 
புதிதானேன் நான்..

 
மரணித்தலின் 
ஒவ்வொரு 
கணமும் 
என் 
ஜனனம் 
உன் மடியில்...!

தமிழே செல்...



விழிநீர்களே 
துணையாகும்...
 

அந்தவகையில்
உனக்கான 
என் 
சில மொழிகள்..
 


என் 
சுயத்தையே
உனக்காக 
நான் 
இழக்கதயாராக 
இருக்கும் பொழுது
உன்மேல் 
தவறு என்று 
நான் 
ஒரு போதும் 
நினைத்ததில்லை...
 


அனைத்தும்
என்னில் 
உள்ள தவறு 
என்பது நிதர்சனம்..
 


மறக்க 
முடியவில்லை 
உன் 
ஒவ்வொரு 
வார்தையின் வலியையும்..
 
என்னால்
நீ 
காயப்பட்டதனால்...
 

நான் 
எடுத்த ஒரு முடிவு..
 

எனக்கு 
என் 
சுயநிலை
தேவையில்லை..
 

அதனால்
தமிழே
எனை 
நீங்கி 
செல்லட்டும்..
 

உனக்கான 
என் 
கடைசி வரிகள் இவை..!
 
மன்னிப்பாயா..!


''மீண்டும் மௌனங்கள் அழுகின்றன..!''



எதற்கோ 
மனது 
தவிக்கிறது..


எதையும் 
புரிய 
மறுக்கிறது....


அன்று 
செய்த 
தவறிற்கு 
இன்றும் 
தண்டனையா? 
புரியவில்லை
எனக்கு.... 


எதற்கு 
இந்த 
மாற்றம்? 
எதற்கு
இந்த 
சோகம்? 


புன்னகை மலர்கள் 
என்னிடமிருந்து 
உதிர்ந்துபோன 
மாயமென்ன.. ? 


மௌனம் கூட 
வலிக்கிறது. 
விழிகள் இங்கு 
கனக்கிறது. 


நேரங்கள் 
எங்கோ தூரமாகிட- 
உறைந்து போனது 
எனது இதயம்..
 


நான் 
உன் 
மனமெனும் 
மலரை கசக்கிவிட்டேனா?
மன்னிப்பாய் 
கண்ணா 
உன் மழலை 
மொழியால்...
மீண்டும் மௌனங்கள் 
அழுகின்றன--எனக்குள் சத்தமாக...!!


இங்கே ஒரு குட்டி இளவரசி...!




அபலை
இவள் புலம்புகிறாள்..
அணைப்பதற்கோ 
யாருமில்லை..
 


பெற்ற உறவுகள் 
சுமையாக..
உற்ற உறவுகள் 
பகையாக..
நட்பின் உறவுகள் 
நலிந்துபோக
நடை பினமாகியது 
இவள் வாழ்க்கை..
 


புன்னகையை 
மறந்து 
விம்மி வெடிக்கும் 
இவள் 
இதயம்..
 


உயிர்ப்பின் 
துடிப்பில் 
துயரத்தை 
சுமந்தவாறு 
இவள் 
ஜனனம்..
 


விழிநீரின் 
வழியே 
இவள் 
அவலம்..
 


என்றோ 
ஒரு நாள்
இவை எல்லாம் 
களையப்படும்..
 


7 குதிரைகள் 
பூட்டிய தேரில் 
வருவான் ராஜ குமாரன்...
 


இவள் 
விழிநீர் தனை 
இதழ்களால் 
களைவான்...
 


காதல் தேவனை 
எதிர்பார்த்து 
கவலைகளை 
தன்னுள் 
புதைத்தபடி 
காத்திருக்கிறாள்-
இங்கே 
ஒரு குட்டி இளவரசி...!