Sunday, July 22, 2012

கவி..



கரம் சேர்த்து
கைகோர்த்து
கவிதைகள் பாடிய
கனவு நாட்களே
இன்று கவியானதே..!

உனக்காய்...



கண்கள் கதைபேசி
கைகள் ஸ்பரிசித்த
கனவு நாட்களை
பரிசளித்திருக்கிறாய் நீ-
எனக்காய்..
அவற்றை 
ஸ்வாசித்தபடி நான் -
உனக்காய்...!

நினைவுகளினால்...




உடைந்து விழும்
கண்ணீர்த்துளியிலும்
உருக்குலைந்தோடும்
உள்ளத்து நினைவுகளிலும்
தெள்ளத்தெளிவாய் தெருகிறாய்..
மீண்டும் மீண்டும்
நெருங்குகிறாய்-என்
நினைவுகளினால்..!

யாசகம் ..




விழிகள் மூடி
உன்னை யாசிக்கின்றேன்..
யாசகனே எனக்கோர்
யாசகம் தருவாயா..?
என்றும் 
உன்னருகிலிருப்பதற்காய்...!

உயிரான என் அண்ணனுக்கு..! (உன் தங்கையின் பாச அலைகள்..! )





















Thursday, July 19, 2012

தரம்கெட்டுத்திரியும் கிழடுகள்... (ஒருசிலருக்கு மட்டும்)



விழிகளில் துளிக்கும்
பனித்துளியால்
சில பொழுதுகளில்
கடல் கூட கரைகிறது..

மௌனமாக
மனதினுள்ளே
மூன்றாம் 
உலக யுத்தம்...

மாறிவிட்ட சமூகத்தின்
மாற்றத்தை
சுமக்கமுடியாமல்
மழுங்குகிறது
பெண்மை..

கட்டிக்காத்த புனிதம்
காட்டாற்றில் அடித்துச்செல்ல
கரைகிறது கண்மை..
அதில் குளிர்கிறது ஆண்மை..

சத்தியத்தை மறுத்து
சாத்தியமில்லாமல்
சகுனம் பார்க்கும்
சில சனியன்கள்
இன்று இங்கே...!

தட்டி நிமிர்ந்த மானுடம்
இன்று
தரங்கெட்டுத் தள்ளாட
ததிம்கிணதோம் பாடும்
சில தலையற்ற
முண்டங்கள்...

பெரியவர் என்றால்
மதிப்பு என்பதுபோய்
பெரிசு என்று இன்று
தரிசு என்றாகிப்போச்சு..

தண்ணி முதல்
தம் வரை
தள்ளாதவயதில்
நடைபயணம்...

போதாதென்று
தன் வயசுக்கு
இளசுகள் மேல்
வாலிப இச்சை...



தன்வழி உயர்வாக்கும்
தலைவர்கள்
இன்று
தன்னிலை மறந்து
தறிகெட்டு தள்ளாட
தரமற்ற வழி சொல்லி
சிறிசுகளும்
சிட்டாய் பறக்கிறதே..

நட்ட நடு வீதியிலே
நட்ட மரம் போல் கிடக்கின்றார்..
மொட்டுவிட்ட கனியிலெல்லாம்
எச்சில் இச்சை பகர்கின்றார்..

நாட்டு நடப்புக்கேற்ப
நடுத்தெருவில்
ஆடையுரிப்பு..
நிர்வாணக்கோலத்தில்
நிரந்தரமாய்
சிலையமைப்பு..

மகள் வயதிருக்கும்
ஆனால்
மனதோ
ஓரிரவில் மட்டும்
அவளை
மனைவியாக்க
துடிக்கிறது..

அருகால்
செல்லுகையில்
அணைக்கத்துடிக்கும் 
கைகள் - அவளது
அங்கத்தில்
பதிவதால்
ஆறுதல் காண்கிறது போலும்..


சங்கத் தமிழ்
பொங்கும் வார்த்தைகள்
இன்று
சத்தியத்தை தொலைத்து
சாகத்துடிக்கிறது -
சரக்கடித்தவனின்
சல்லாபத்தால்...

ஐந்து வயதின்
அழகிய குழந்தைகூட
ஐம்பதுவயதின் இச்சையில்
பிச்சைகேட்டுத் தள்ளாடும்..

பிஞ்சு விரல்கள்
கெஞ்சி நிற்க -
தன்னை 
கொஞ்சச்சொல்லும்
குறை கேட்பீரோ..?

முன்பிருந்த
நிலை மாறி
இன்று
மூத்தோரே
வம்பாயினர்..


தறிகெட்டு 
இன்று
தம் தரமும் கெட்டு
நாளை
முறை கெட்டு
முட்டாளாகும்
வாழ்க்கை வேண்டுமா..?

எழு தோழா எழு..
விழி தோழா விழி..
அஹிம்சையோ ஆயுதமோ
எதையாவது எடு..
ஆனால்
அறிவை மட்டும் 
இழக்காதே ஒருபோதும்..!

மீண்டும் விடியும்
மின்னலாய் ஒளிரும்
வசந்தமான வாழ்க்கை..! 


Wednesday, July 18, 2012

உண்மைக்காதலன்..



என்னவளே..
எங்கிருந்து வந்தாய்
என்
இதயத்தை
துளைப்பதற்காய்...

கண்மணியே..
காத்திருப்புக்களுடன்
என்
காதலும்
தொடர்கிறதடி
உன்னை..

வானத்து
நிலவாக
நீயிருக்க:
வையத்துள்
கனவாகி
நான் 
தவித்தேனே..

மின்னல்
சிரிப்புக்காறி நீ..
ஒரு
பிஞ்சு
நெஞ்சக்காறி..

கனவுகள்
பலகோர்த்து
கவிதையில்
சிலை
வார்த்து
மெல்லினமே
உனக்காய்
மெட்டமைக்கிறேன் -
என்
மொட்டான
காதலை
மலரச்செய்வாயா..?

பௌர்ணமியே
உனக்காய்
பார்த்திருக்கிறேன் -
என்
விழிகளுக்கு
வரத்தை
நீ
தருவாயா..?

காதல் 
இல்லையடி
கண்ணே -
உன்மீது
காமமும்
இல்லையடி
பெண்ணே..

காதலது தாண்டியதாய்
காமமது தாண்டியதாய்
உண்மையான ஒன்று
உன்மீது என் உள்ளத்திற்கு..

புரிந்து கொள்
என் உயிரே - என்றும்
எனை பிரிந்து
போகாதே சகியே..

நீ வரும் வழிபார்த்து
என் விடியல்கள்
நகர்ந்துவிட
உன்னிரு விழிபார்த்து
என் ஜீவன்
உறங்குமடி..

தாயாகி
சேயாவேன்..
தாலாட்டி
சீராட்டி
உன்னை
என் மார்பில்
பாராட்டுவேன்..

உன் அன்பில்
உயிர் கரைவேன்..
என்றும்
உனக்காய்
உருக்கொள்வேன்..

என்னவளே,
உனக்காய்
காத்திருக்கும்
இவன்
உன் அன்பில்
ஊமைக் காதலன் -
உனக்கான
உண்மைக்காதலன்
என்றும் காதலுடன்...!!

குறும்பு..





உனது 

சின்னச் சின்ன 

குறும்புகளில்

சிட்டாகப் பறக்கிறது

எனது மனது..!

வருகை...




வாடிக்கிடக்கும்

மலர்களை

வர்ணம் குலையாமல்

சேர்க்கின்றேன்..

கண்ணா- உந்தன்

வருகைதனை

நோக்கியபடி..!

Saturday, July 14, 2012

நீதானடா...



கண்களறியாத
காற்றைபோல
கனவிலும் வந்தாயடா..

சொல்லாத
சேதி பல
சொல்லிச்சென்றாயடா..

நினைவுகள்
பல- என்னுள்
விதைத்துப் போனாயடா..

நிழல்தனில்
உன்னை
வரைந்து வைத்தாயடா..

கைகோர்த்து
தோள் சாய்ந்து
உரசிச்சென்றாயடா..

இன்று
கண்ணோடு
விழிநீராய்
கரைந்தேமீண்டாயடா..

சொல்லப்படாத சோகம்...


கரும்பாறை
நடுவிலே
விரியலாய்
தெரியும் பூமி..

விரிந்த பூமிதனிலே
சலசலத்து ஓடும்
ஓடை நீர்..

ஓடைக்கரை தனிலே
ஒற்றையாய் நிற்கும்
அத்தை மகள்..

அஞ்ஞனம் பூசி
அழகுற்ற கண்ணிற்குள்
அரைகுறையாய் விழிநீர்
வழிபார்த்து வழிந்தது..

கண்ணிட்ட மை கரைந்து
கவிதையாய் கைகோர்த்து
விண்முட்ட இடியோடு
பண்ணிட்டு இசையாகியது..

தொட்டுச்சென்ற காற்று
விட்டுச் சென்ற காதலை
கட்டிச் செல்ல நினைத்தவள்
மெட்டுக்கட்டி விக்கினாள்..

அலையாக அலைந்த
கருநாக கூந்தலோ
கனவான சோகத்தால்
காரிருளாய் படர்ந்தது..

மலர்கோதி மணமுடிக்க
மங்கையிவள் காத்திருக்க
களுவேறி கரம் விட்டு
காதலன் போன ஞாயமென்ன..?

விண்ணின் நிலவிடமும்
எண்ணின் பலவிடமும்
ஏவியவள் சரிகின்றாள்
தன் துணைவன் எங்கேயென..?

துஞ்சியவன் அஞ்சியவன்
வெஞ்சி வசை பாடியவன்
அத்தனைக்கும் புள்ளிவைக்க
அத்தான் போன மாயமென்ன..?

நெஞ்சை நெடிதுயர்த்தி
நீதிக்கு வலி சுமந்து
நீடித்த சோகத்தை
நிழலாக்கி தணலானான்..

நாளைவரும் நாளெண்ணி
நங்கையிவள் காத்திருந்தாள்
நறுமலர் சூட்டிவிட
நட்டுவைத்தாள் 
நந்தவனம்..

நாட்களாச்சு
நாட்கள் பலகடந்து
நரைகூட முளைச்சாச்சு
நம்பிக்கை மட்டும்
நெட்டுயர்ந்து
வேர்விட்டு கிளையாச்சு..
ஆனால்
கைப்பிடிக்க காத்திருக்கும்
கரத்திலொன்று வரவேயில்லை...! 

Friday, July 6, 2012

கனவுகள் ஜனித்திடும் நேரம்..




கனவுகள்
ஜனித்திடும் நேரம்
என்
கவிதைகள்
இசைபாடும்..

ஆளரவம் அற்ற
ஒற்றைத் தெருவழியே
நிசப்தமாய் ஓர்
நடை பயணம்..

நீண்டு வளைந்து
நெளிந்து படர்ந்து
எல்லையற்று
விரிகிறது
ஆட்களற்ற
ஒற்றைத்தெரு..

ஆடைகளைந்து
நிர்வாணமாகி
மீண்டும் வந்த
வசந்தத்தால்
ஆடை பாதி சுமந்து
பரிதாபமாய்
நெளிகிறது..

எங்கள் 
கனவை போல
எட்டிச் செல்லும் 
தெருவின் 
தொலைவும்

வாழ்வின் 
பள்ளங்களை
வரிசையாய் 
நிரவிடும்
எண்ணற்ற
திரவியமும்

கொட்டிக்கிடக்கிறது
கொள்ளையிட 
யாருமின்றி...

தெருவோரத்து
புளியமரம்
அன்னிச்சையில்
அசையும்போது
திகிலடையும்
என் மனம்..

இருள் கிழித்து
ஒளி தேடி
தலை நிமிர்த்தி
நடக்கின்றேன்
நான் - நானாயாகிட..

மீண்டும்
ஆளரவம் அற்ற
ஒற்றைத் தெருவழியே
நிசப்தமாய் ஓர்
நடை பயணம்..

தொடர்ந்தும்
கனவுகள்
ஜனித்திடும் நேரம்
என்
கவிதைகள்
இசைபாடிடும்...