Friday, July 6, 2012

கனவுகள் ஜனித்திடும் நேரம்..




கனவுகள்
ஜனித்திடும் நேரம்
என்
கவிதைகள்
இசைபாடும்..

ஆளரவம் அற்ற
ஒற்றைத் தெருவழியே
நிசப்தமாய் ஓர்
நடை பயணம்..

நீண்டு வளைந்து
நெளிந்து படர்ந்து
எல்லையற்று
விரிகிறது
ஆட்களற்ற
ஒற்றைத்தெரு..

ஆடைகளைந்து
நிர்வாணமாகி
மீண்டும் வந்த
வசந்தத்தால்
ஆடை பாதி சுமந்து
பரிதாபமாய்
நெளிகிறது..

எங்கள் 
கனவை போல
எட்டிச் செல்லும் 
தெருவின் 
தொலைவும்

வாழ்வின் 
பள்ளங்களை
வரிசையாய் 
நிரவிடும்
எண்ணற்ற
திரவியமும்

கொட்டிக்கிடக்கிறது
கொள்ளையிட 
யாருமின்றி...

தெருவோரத்து
புளியமரம்
அன்னிச்சையில்
அசையும்போது
திகிலடையும்
என் மனம்..

இருள் கிழித்து
ஒளி தேடி
தலை நிமிர்த்தி
நடக்கின்றேன்
நான் - நானாயாகிட..

மீண்டும்
ஆளரவம் அற்ற
ஒற்றைத் தெருவழியே
நிசப்தமாய் ஓர்
நடை பயணம்..

தொடர்ந்தும்
கனவுகள்
ஜனித்திடும் நேரம்
என்
கவிதைகள்
இசைபாடிடும்...

No comments:

Post a Comment