Saturday, January 28, 2012

கவியிசை...!


இதயங்களில்
காத்திருக்கும்
இதமான
அன்புதனை
வேதனையில்
தவிக்கவிட்டு
திணறுகின்றாள்
அங்கொருத்தி...!

காதலின்
கீதத்தில்
கவிகளின்
ஆழத்தில்
கலந்துவிட்ட
ஸ்வாசத்துடன்
காத்திருக்கிறாள்
அங்கொருத்தி....!

மௌனமான
வேளையிலே
மனதினிக்கும்
கானங்கள்:
மனம்நிறைந்த
பொழுதுகளில்
மகிழ்வளிக்கும்
பாடங்கள்..!

காத்திருப்பில்
கவியிசைத்து
கண்ணசைவில்
உளம் தொலைத்து
கன்னிமனம்
வாடிநிற்க
கவிதைகளில்
இசையானாள்...!


Wednesday, January 25, 2012

கவிதையின் ராணி..


நீ
இல்லாத
பொழுதுகள்
தனிமையில்
வாடிநிற்க
கவி வடிக்க
நினைக்கின்றேன் - ஆனால்
வார்த்தைகள்
வரவில்லை..!
 
காரணம் - என்
கவிதையின் ராணி
நீ
என்னுடன்
இல்லையே...!
 
இருண்ட இரவிலே
இனிமையான
உன் நினைவுகளுடன்
கதைபேசி
கண்ணுறங்கத்
துடிக்கின்றேன்
தூக்கத்தை
தேடியவனாய்...!


Monday, January 23, 2012

காத்திருப்பு....



நீ
வருவாய்-வருவாய்
என்று
தவிக்கும்
உள்ளத்திற்குத்தான்
தெரியும்
அதன்
காத்திருப்பின்
அர்த்தம்
என்னவென்று...!

உன் மொழி
கேட்க
ஏங்கும்
உணர்வுகளுக்குத்தான்
தெரியும்
அதன்
காத்திருப்பு
என்னவென்று..!

உன்னைபற்றி
என்னைத்தவிர
எல்லோருக்கும்
தெரிந்திருக்கிறது-
ஆனால்
உன்னவளுக்கோ
தெரியவில்லை..!

ஏதோ
அதுதான்
சொல்லமுடியாத
சோகம்...
கூறவில்லை
உன்னிடம்- கூறத்
தெரியவுமில்லை
இவள் மொழிகளுக்கு..!


என்னவோ
புரியமுடிந்தால்
நீ
புரிந்துகொள்-இல்லையேல்
விட்டுவிடு ஏனென்ற
காரணத்தை ஆராய்வதை..!

உனக்கான
ஆழ்மனதின்
பாசங்கள் தான்
இவளது
மௌனத்திற்கு
காரணம்..!

உனக்கான
மொழிகள்
இல்லாத
தனிமைதான்
இவளது
சோகத்திற்கு
ஆதாரம்..!

எல்லாமே
உன்
அன்பின்
பாசம்
செய்யும்
மாயம்...!

என்றும்
உனக்காய்
இறுதிவரை
தொடரும்
இவள்
காத்திருப்புக்கள்..!

Friday, January 20, 2012

புன்னகை தேசத்துக் குயில்..



பல மௌனங்களை
பாரங்களாக்கி
சுமந்தது
அந்த இதயம்..

பழைய நினைவுகளில்
புதைந்து சிதைந்து
விம்மியது
அந்த இதயம்...

ஏதோ ஒரு
கனவின் கருவை
இழந்த வலியில்
துடிக்கும் இதயமது..

பெண்மையின்
மென்மைகளை
தன்னுள் புதைத்து
மடிந்த இதயமது..

தனக்கான
வாழ்க்கையை
தான் வாழாது
தத்தளித்த இதயமது...

இன்று
ஏதோ ஓர்
வசந்த காற்றின்
வருகை...

மீண்டும்
துளிர்க்கிறது
இதயம்...

சிதைந்துபோன
புன்னகை மலர்களை
தேடி எடுத்து
கோர்க்கிறது தனக்காக..

ஒடிந்துபோன
நம்பிக்கை வேரில்
பூக்கிறது- புது
உலகம் தேடி..

இன்று-

வண்ணக்
கனவுகளின்
வகையான
சிதறல்கள்..

தித்திக்கும்
இன்பங்களின்
திறவுகோலாய்
சில சொந்தங்கள்...


அழுது அழுது
சிவந்த விழிகள்
இன்று அதிசயமாய்
மலர்கின்றன...

விம்மி விம்மி
துடித்த உதடுகள்
புன்னகையில்
சிவக்கின்றன...

மரத்துப்போன
இதயமதில்
மீண்டும்
மந்தகாசமாய்
மலர்வொன்று..

மீண்டும்
அந்த இதயம்
சிறகடிக்கிறது
புன்னகை தேசத்துக் குயிலாகி....!!!


Tuesday, January 17, 2012

கசியும் சோகம்...


நிழல்களின் மறைவிலே
நிஜங்கள் உறங்கிவிடும்..
என்றோ தொலைந்த சுகம்
சோகத்தில் நிறைந்துவிடும்..!

விழிகளின் வலிகளை
கவிகளில் விதைத்துவிட்டேன்..
கவிகளின் மொழிகளை
உள்ளத்துள் புதைத்துவிட்டேன்..!

காலங்களின் மறைவினில்
கனவுகளின் இழப்புக்கள்..
உதிர்வதும் மறைவதும்
புன்னகையின் மாயங்கள்...!

ஏதோ ஒன்று நிர்க்கதியாய்:
எங்கோ ஒன்று நிதர்சனமாய்..
அந்திவானில் சோகங்கள்:
ஆழ்கடலில் நீர்த்துளிகள்..!

தொலைந்துவிட்ட சுகங்களுக்குள்
மறைக்கப்பட்ட புன்னகைகள்..
மயங்கிவிட்ட இதயத்தில்
இன்று வடுவாகிய ரணங்கள்..!

தொலைதூரத்தில் ஒரு நட்சத்திரம்
தொலைத்துவிட்ட மௌனங்களை
ஒன்றுசேர்த்து ஒளியாக்கி
கசிகிறது இருளினிடையில்..!

ஓராயிரம் மௌனங்களில்
இசைக்கப்பட்ட நாதமாய்
இங்கே ஓர் புல்லாங்குழல்
இசைக்கிறது ஊமையாகி..!

வாழ்ந்துவிட்ட வாழ்க்கையின்
வலிநிறைந்த பாதைகள்
வடுக்களாய் மாறி நிற்க
வஞ்சிமகள் வாடுகின்றாள் ..!

உதிர்ந்து தொலைந்த மலரின்
உள்ளத்து உணர்வுதனை
வாசனையாய் கலைத்துவிட்டு
சோர்ந்து நின்றாள் மேகமங்கை...!

உலகின் மாயங்களை
சோகங்களில் பதியவைத்து
உள்ளே புலம்பியபடி-இங்கு
உழல்கிறது என் பேனா..!!


Sunday, January 15, 2012

கல்லறையை நோக்கி ஒரு பயணம்...


வாழ்க்கையில் தொலைத்த
சுகங்களைத்தேடி
சுமைதாங்கிக்கல்லாய்
இன்று ஒருத்தி...

பூக்கும் புன்னகை
உதிரும்
பூக்களாய்
மாறிநிற்க
உள்ளத்தின் வழியே
உறவுகள்
தேடி சோர்ந்து நின்றாள்..

சொந்தமென்ன..?
பந்தமென்ன..?
எல்லாமே
சிறையெடுக்க வந்த
வேஷம் தானே..

பெண்ணின் உள்ளம்
என்றால்
மதிக்காதோ
இந்த
உலகம்..?

அதிலும்
அந்த
பேதைக்கும்
மனசு உண்டு
நினைக்காதா உலகம்?...

ஏதோ
தினமும்
அவள்
புலம்புகிறாள்-
விடியல்
ஒன்றை
நோக்கியவளாய்....

அழுது அழுது
சிவந்துவிட்ட
விழிகளும்:

விம்மி விம்மி
துடிதுடிக்கும்
உதடுகளும்:

ஏக்கத்தின்
புகலிடமாய்
அவளிடம்...

என்னவோ
செய்யாத தவறுகளுக்கே
தண்டனை ஏற்பது
வழக்கமாகிவிட்டது
அவளுக்கு....

பொத்திப் பொத்தி வைத்த
சோகங்கள்
ஒரு நாளில்
விம்மி வெடிக்கும்
நிட்சயமாய்..

ஆனால்

அன்று
அவள் பயணம்
முடிந்திருக்கும்- ஒரு
கல்லறையை நோக்கியதாய்....!

Saturday, January 14, 2012

ஏக்கம்..


விடியமறுத்து
இருளில்
தொலையும்-என்
ஒவ்வொரு
இரவுகளும்
விழிநீரிலேயே
கசிகின்றன..

உதடுகள்
உன்முன்னே
புன்னகைத்தாலும்
உண்மையில்
உள்ளம்
அழுகிறது..

தொலைந்துபோகும்
என்
ஒவ்வொரு
பயணமும்
உன்னைத்தேடியே
முடிகின்றது...

வானில்
எழும்
விடிவெள்ளியை
தினமும்
எண்ணியே-இந்த
கனவும்
கலைகின்றது...!

Tuesday, January 10, 2012

ஓர் ஜீவன்...



தொலைகின்ற
ஒவ்வொரு
பொழுதுகளும்
விழிநீருடனே
கலக்கின்றது..

மொழிகளின்
மௌனம்-அது
கவிகளாகி
கலைகின்றது..

நிஜத்தை
தேடும்
நிழலாய்
உயிரும்
நிர்க்கதியானது
அங்கு...

இளமையின்
வசந்தங்களை
தொலைத்த
ஏக்கத்தோடு
போராடும்
அங்கு ஓர்
பாவை....

மெல்ல கசியும்
இருளின்
சலனத்திலே
உறைந்துபோனது
ஒரு இதயம்..

காற்றின்
ஓசைகூட
இரக்கமின்றி
கலங்கடித்தது..

ஆனால்
அந்த 
ஜீவன்மட்டும்
விடியும் பொழுதை
விம்மலுடன்
எண்ணியது...


நிலவு...


தனிமை...