வாழ்க்கையில் தொலைத்த
சுகங்களைத்தேடி
சுமைதாங்கிக்கல்லாய்
இன்று ஒருத்தி...
பூக்கும் புன்னகை
உதிரும்
பூக்களாய்
மாறிநிற்க
உள்ளத்தின் வழியே
உறவுகள்
தேடி சோர்ந்து நின்றாள்..
சொந்தமென்ன..?
பந்தமென்ன..?
எல்லாமே
சிறையெடுக்க வந்த
வேஷம் தானே..
பெண்ணின் உள்ளம்
என்றால்
மதிக்காதோ
இந்த
உலகம்..?
அதிலும்
அந்த
பேதைக்கும்
மனசு உண்டு
நினைக்காதா உலகம்?...
ஏதோ
தினமும்
அவள்
புலம்புகிறாள்-
விடியல்
ஒன்றை
நோக்கியவளாய்....
அழுது அழுது
சிவந்துவிட்ட
விழிகளும்:
விம்மி விம்மி
துடிதுடிக்கும்
உதடுகளும்:
ஏக்கத்தின்
புகலிடமாய்
அவளிடம்...
என்னவோ
செய்யாத தவறுகளுக்கே
தண்டனை ஏற்பது
வழக்கமாகிவிட்டது
அவளுக்கு....
பொத்திப் பொத்தி வைத்த
சோகங்கள்
ஒரு நாளில்
விம்மி வெடிக்கும்
நிட்சயமாய்..
ஆனால்
அன்று
அவள் பயணம்
முடிந்திருக்கும்- ஒரு
கல்லறையை நோக்கியதாய்....!

No comments:
Post a Comment