Thursday, December 1, 2011

விடியல் என்றோ...??



எங்கோ அனைத்தையும்
மறந்து சிறகடிப்பாள்
அவள்...

ஆனாலும் சில பொழுதுகளில்
இல்லை இல்லை..
பல பொழுதுகளில்- அந்த
சிறகு ஒடிந்து போய்விடுகிறது.

பிரிய முடியாத
சோகத்துடன் மீண்டும்
விழிகள் கனத்திடும்...

புரிய மறுக்கும் உறவுகளும்-
தெளிய மறுக்கும் உண்மைகளும்
ரணமாகும் அவள் வாழ்வில்...

-----------------------------------------

எனினும் அந்த காயங்களின் மருந்தாக ஒருவன்...
அவளது அன்பின் தேடல் -
அவனிடத்தில் தான் முக்தி பெற்றது...!

அந்த ஒருவனால் இன்று அவளிடம்
பல உறவுகள்- அன்பின் சொந்தங்களாய்
அவளிடம்..!

------------------------------

எனினும் அவள் விழிகள்
கனத்திடும் வேளைகள் தான்
பல..

அவனுடன் இருக்கும் -
அவன் நினைவில் வாழும்
நிமிடங்களைத் தவிர..

மௌனங்களே
சுகமாகி
மனதினில்
வலிகளை
சுமக்கின்றாள்..

வேதனைகள்
புதிதிதல்ல
அப் பேதைக்கு...!

வெளியே
யாராலும் புரிய முடியாது
அவள்
ரணங்களை - அவனைத் தவிர...

அவள்
தலையணைக்குத்தான்
தெரியும்- அவள்
விழி நீரின்
கனம்
என்னவென்று..

இத்தனை
வருடங்களாக
அவள்
விழி நீரை தாங்கியது- துடைத்தது
அத் தலையணையென்பதனால்...

 நான்கு சுவரின் நடுவிலே
மௌனமாய் அழும் அவள்
இதயம் - என்றும் விடியல்
காணாத இரவுகளாய்..

------------------------------------------

உதடுகள்
புன்னகைத்தாலும்
உள்ளத்தில்
ரணங்கள்
வடுக்களாகி
வதைக்கின்றது
அவள்
மனதை...

யார் அறிவார் இதை..?
யார் புரிவார் அவள்
ஏக்கத்தை...?

தவிக்கும் தவிப்புக்களும்
தேடும் தேடல்களும்
இப்பொழுது
காத்திருப்பது
அவன்
வருகைக்காய் மட்டுமே..

ஏனெனில்
அவனிடம் தான் உள்ளது
அவளை புரிந்துகொள்ளும்
ஷக்தி...

-------------------------

காத்திருப்பாள்
அவள்
காலமெல்லாம்
அவன்
வருகைக்காய்...!

விடியல் என்றோ...??


No comments:

Post a Comment