Wednesday, December 14, 2011

வார்த்தைகளே அவனாயானபடியால்...



நினைவுகளின் வழியே
நிஜங்களை தொலைத்தவள்
அவள்...

கவிகளின் வழியே
கனவுகள்
காண்பவள் அவள்..

உள்ளத்து சோகத்தின் வழியே
புன்னகை தொலைத்தாள்...

இதயத்தின்
ஓசைகள் வழியே
மௌனத்தை
தொலைத்தாள்..

அவள்
மௌனத்தின் வழியே
சோகங்களை
மறந்தாள்...

நிழல்களாகிப்போன
நிஜங்களும்-
நிர்க்கதியாகிப்போன
அவள் வாழ்வும் ஒன்றுதான்...


ஸ்வாசிக்க மறந்து
இறுகிப்போன இதயமும்
உணர்வுகள் என்றோ
மரத்துவிட்ட கனவுகளும்
அவளுக்கு புதிதல்ல...

நிசப்தமான
நேரங்களில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
அவள் ஆழ்மனம்- கண்ணீர்க்காவியமாக..

அனைத்தையும் மறந்து
புன்னகை செய்ய முடியும்
அவளால் - அவனருகில்
இருக்கும் பொழுதுகளில்
மாத்திரமே...

எனினும்
ஏதோ 
அவள் கூறிய வார்த்தைகளை
அவளாலேயே புரிய முடியவில்லை...

அதன் வலி
மிக கொடுமையானதுதான்..

ஆனால்
அதை சொன்ன மனது
கல்லானதை யார் அறிவார்..

என்னவோ அவனின் நலனிற்காய்
தன்னிதயத்தை
கல்லாக்கிக்கொண்டாள்போலும்...

அவனாலும்
புரியமுடியும்
அதை..

புரிந்திருப்பான்..

நிஜங்களை
தொலைத்து
நிர்க்கதியான அவளுக்கு
துணையானவன்
அவன் மட்டுமே...

அவனுக்கான
ஒருத்தியாகவே
வாழும் அவளுக்கு
இன்னும்கூட
வாழத்தெரியாது:
பேசத்தெரியாது:
புன்னகைக்கத்தெரியாது..

அவளுக்கு தெரிந்த ஒன்று -
அவன் மட்டுமே...
அவன் தான் அவள்
உலகம்-உறவு-நட்பு-காதல்-பாசம்
எல்லாம்..

எப்பொழுதும்
தன்னையறியாது
தவறு செய்யும்
அவளுக்கு இம்முறை
மன்னிப்பு கேட்ககூட
வார்த்தைகளில்லை....

காரணம்-
வார்த்தைகளே
அவனாயானபடியால்...!!

No comments:

Post a Comment