Tuesday, February 28, 2012

காதலின் பயணங்கள்..

இன்று காதலர் தினம் தான்... 

ஆனால் அவர்களுக்கு என்றுமே காதலர் தினமே... 

ஆனாலும் ஏனோ அவளுக்கு இன்று அவனை பார்த்து ரசிக்க உள்ளம் 

துடித்தது...

நிமிடங்களின் நகர்வை விட அவள் உள்ளத்தின் துடிப்பு 

வேகமாயிருந்தது... 

அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்... 

அவனை பார்த்திட துடிக்கும் விழிகளுடன் சென்ற அவளுக்கு அவன்

 முகம் கண்டவுடன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... 

மனதிற்குள் துள்ளிக்குதித்தாள். 

அவன் நெருக்கங்கள், அவன் தீண்டல்கள், செல்லக் கோபங்கள், 

தித்திக்கும் முத்தங்கள்

இன்றைய நாளில் அவளுக்கான அவனது பரிசுகளாயின. 

ஏதோ அவனுடன் காரணமே இல்லாமல் செல்லமாக சண்டையிட்டு

அவனை தன் பின்னே கெஞ்சவைத்துப்பார்ப்பதில் அலாதிப் பிரியம் 

அவளுக்கு. 

அவனுடன் இருக்கும் பொழுதுகளில்தான் அவள் சோகங்களை மறந்து 

சிறகடிக்கின்றாள் பட்டாம்பூச்சியாகி... ஆனாலும் 

அவனை பிரியும் அந்த நிமிடங்களில்-

 அவள் மனதின் துடிப்பு நின்றுவிடுகிறது - விழியின் மொழி நீராகி

 மலர்கிறது. 

அவளிற்கு மட்டுமல்ல- அவனது நிலையும் அதுதான். 

நாளைய மலர்வை எண்ணியபடியே 

இருவரின் மன உணர்வும்

இன்று 

ஒருமித்து பயணிக்கின்றது வாழ்க்கை பாதையில்..


Thursday, February 9, 2012

தொடுவானம் தான் நீ....

 தொடுவானம் தான்
நீ..

உன்னைத்
தொட்டுவிடும்
கனவோடு
ஓடிவருகிறேன்
நான்..

ஆனால்
நீயோ
தொலைதூர
நகர்வாகி
எட்டிச்செல்கிறாய்..!

ஏக்கங்கள்...!


என்றோ
தொலைக்கப்பட்ட
ஏக்கங்களுடன்
இன்றும்
புதைக்கப்படுகின்றன
புதிய பல
ஏக்கங்கள்...!

Wednesday, February 8, 2012

தனிமையின் நகர்வுகள்...


என் 
தனிமையின் 
கதவுகள்
இரக்கமற்றவை..

என் 
தனிமையின்
அமர்வுகள்
கொடுமையானவை..

என் 
தனிமையின்
தவிப்புகள்
வேதனை நிறைந்தவை..

மௌனமான
அந்தகாரத்தின்
வாசலில்-தனிமையின்
புல்லாங்குழலுடன்
நான் இசைபயில்கின்றேன்
ஓசை ஏதும் எழாமல்..

எந்தோட்டத்து 
புன்னகைச்செடிகள் கூட
பூக்கின்றன-சோகமெனும்
வாடாமலரை..

மலரும் 
அம்மலர்களுக்கு
கண்ணீர் துளிகளை
காணிக்கையாக்கி
இங்கு புலம்புகின்றேன்
மௌனத்தின் தனிமையில்...!

Sunday, February 5, 2012

கசிவு..

மனதில் உள்ள
பாரங்களும்:
விழியிலுள்ள
சோகங்களும்:
மௌனமாக
கசிகின்றன- என்
கல்லறை
நோக்கியதாய்...!

Wednesday, February 1, 2012

வாழத்தெரியாதவள்..!


புனிதத்தை
காயப்படுத்தியது
அவள்தான்..

நிஜம்தான்..

அவளுக்கு
வாழ்க்கையை
வாழத்தெரியவில்லை..

"ஏன்"
என்ற
வினாக்கள்
பல
அவளுள்ளும்
உண்டு..

ஆனால்
விடைதான்
கிடைக்கவில்லை
இதுவரை...

அந்த
புனிதமான
அன்பிற்கும்:
காதலிற்கும்
அவளுக்கு
தகுதியில்லை
போலும்..



புனிதத்தை
காயப்படுத்தியதால்
அவள் விழிகள்
நீரை உதிர்த்தது..

எனினும்
அந்த விழிநீர்
புனிதத்தை
களங்கமாக்கும்
என்பதால்
அது
அவளுள்
புதைந்தே போனது...

புரிந்துகொள்ளும்
உன்னை
புரிந்துகொள்ள
மறுத்தது
அவள்தான்..

நிஜம்தான்..

அவளுக்கு
வாழ்க்கையை
மகிழ்ச்சியாக
வாழவே
தெரியவில்லை..!!