Saturday, December 31, 2011

மௌனத்துடன்...


கனவுகளின்
தாரகைக்கு
கவிதைகளே
பாடலானது..

மொழிகளின்
இனிமையோ
மௌனத்தில்
கானமிசைத்தது..

மீட்டமுடியாத
ஸ்வரங்களாய்
எண்ணங்கள்
மறைந்துபோயிருந்தது...

ஏக்கங்கள்
மிகுந்த விழிகளில்
சோகங்கள்
பூபாளமிசைத்தது..

சொர்க்கத்தில்
நரகமுண்டோ
இன்பத்தில்
துன்பமுண்டோ..?

தொலைவிலே
தொலைந்துவிட்ட
வாழ்க்கை
பார்த்து நகைத்தது...

விழிநீரும்
வஞ்சிக்கப்பட்ட
இதயமும்
எக்காளமிட்டது...

எனினும்
அந்ததாரகை மட்டும்
அதே மௌனத்துடன்
விடியலை நோக்கியது...!

Sunday, December 25, 2011

போற்றுவோம் பாலனை..!



மண்ணில் உய்த்தான்
மாதவத்தான்!
மானுடர் களைதனை நீக்கி
மறுமையளித்தான்!

புனிதனாய் பூத்தான்
புண்ணியத்தான்!
பூதலம் செழித்தது
புண்ணியத்தால்!


இம்மை வாழ்வின்
இருளை நீக்கி
மறுமை வாழ்வில்
மகிழ்வை விதைத்தான்!

மானுடம் செழித்திட
செங்குருதி நீராக்கி
பூமிதனை நனைத்திட்டான்
புது-யுகம்தனை படைத்திட்டான்!


போற்றுவோம் யேசுபாலனை:
அவன் வழியில்-
உய்திடுவோம்
உலக வாழ்வுதனில்...!

     இனிய நத்தார் திருநாள் நல் வாழ்த்துக்கள்..!!!

Friday, December 23, 2011

நான் மட்டும் இங்கு..



காலங்களின்
காத்திருப்பில்- என்
கவிகளின்
ஜனனம்..

ஏதேதோ
எண்ணங்களால்
ஏமாற்றம்- அது
வழமை...


எண்ணியவை
எண்ணியபடி
கிடைப்பது-இங்கு
நிரந்தரமில்லை...

சோகத்தின்
மடிதனிலே
சுமைகளுடன்
வாழ்கின்றேன்...

சுகங்களைத்
தொலைத்துவிட்டு
விழிநீரில்
நீந்துகின்றேன்....

அவலங்கள்
அனைத்தும்
அடைக்கலமற்று
அலைபாய்கின்றன
இன்று...

என்றோ
தொலைந்த
இனிமைகளை
இன்றும்
தேடியவளாய்
நான் மட்டும்
இங்கு-இன்று...!!!


Wednesday, December 14, 2011

வார்த்தைகளே அவனாயானபடியால்...



நினைவுகளின் வழியே
நிஜங்களை தொலைத்தவள்
அவள்...

கவிகளின் வழியே
கனவுகள்
காண்பவள் அவள்..

உள்ளத்து சோகத்தின் வழியே
புன்னகை தொலைத்தாள்...

இதயத்தின்
ஓசைகள் வழியே
மௌனத்தை
தொலைத்தாள்..

அவள்
மௌனத்தின் வழியே
சோகங்களை
மறந்தாள்...

நிழல்களாகிப்போன
நிஜங்களும்-
நிர்க்கதியாகிப்போன
அவள் வாழ்வும் ஒன்றுதான்...


ஸ்வாசிக்க மறந்து
இறுகிப்போன இதயமும்
உணர்வுகள் என்றோ
மரத்துவிட்ட கனவுகளும்
அவளுக்கு புதிதல்ல...

நிசப்தமான
நேரங்களில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
அவள் ஆழ்மனம்- கண்ணீர்க்காவியமாக..

அனைத்தையும் மறந்து
புன்னகை செய்ய முடியும்
அவளால் - அவனருகில்
இருக்கும் பொழுதுகளில்
மாத்திரமே...

எனினும்
ஏதோ 
அவள் கூறிய வார்த்தைகளை
அவளாலேயே புரிய முடியவில்லை...

அதன் வலி
மிக கொடுமையானதுதான்..

ஆனால்
அதை சொன்ன மனது
கல்லானதை யார் அறிவார்..

என்னவோ அவனின் நலனிற்காய்
தன்னிதயத்தை
கல்லாக்கிக்கொண்டாள்போலும்...

அவனாலும்
புரியமுடியும்
அதை..

புரிந்திருப்பான்..

நிஜங்களை
தொலைத்து
நிர்க்கதியான அவளுக்கு
துணையானவன்
அவன் மட்டுமே...

அவனுக்கான
ஒருத்தியாகவே
வாழும் அவளுக்கு
இன்னும்கூட
வாழத்தெரியாது:
பேசத்தெரியாது:
புன்னகைக்கத்தெரியாது..

அவளுக்கு தெரிந்த ஒன்று -
அவன் மட்டுமே...
அவன் தான் அவள்
உலகம்-உறவு-நட்பு-காதல்-பாசம்
எல்லாம்..

எப்பொழுதும்
தன்னையறியாது
தவறு செய்யும்
அவளுக்கு இம்முறை
மன்னிப்பு கேட்ககூட
வார்த்தைகளில்லை....

காரணம்-
வார்த்தைகளே
அவனாயானபடியால்...!!

வலி..


வார்த்தையின் வலிகள்
கொடுமையானவைதான்..ஆனால்
அதை சொன்ன மனது
கல்லானதை யார் அறிவார்...?
 

Tuesday, December 13, 2011

செல்லமடி நீ எனக்கு....!



அழகிய விழிகளில்
குறும்பு பார்வைகள்...
சின்ன இதழ்களில்
செல்ல சிணுங்கல்கள்...


பிஞ்சு ஒன்றின்
புன்னகை போல
உயிரை அள்ளும்
உன் பூவிதழ் சிரிப்பு..



நீ கூறும்
செல்லக்கதைக்களும்
கவியாகுமே
உன் இதழ் வழியே...


உன் பார்வையில்
அன்பின் ஏக்கங்கள்..
உள்ளத்தில்
உனக்கான தேடல்கள்..


ஏக்கமும்-தேடலும்
தொலைந்த இடம்
இன்று என்
உள்ளமோ உனக்கு..?


உன் உதட்டின்
புன்னகையை
ஸ்வாசிக்கிறேன் இன்று
நான்...


உன்
சில கெஞ்சல்களும்
சிணுங்கும் கொஞ்சல்களும்
கீதமாகும் என் உயிரில்...


என்றும்
உனக்கன உறவாக
நான்..


இன்று
எனக்கான
வாழ்வாக
நீ..


எப்போதுமே
செல்லமடி
நீ-
எனக்கு...!

Monday, December 12, 2011

பார்த்து மகிழ யாரும் இல்லாத பாழடைந்த என் - கிராமத்து வீடு!


பச்சை வயல்களும்:
பட்டு தெறிக்கும்
வானமும்:
சிட்டுகளின்
சிணுங்கலும்:
மெட்டிசைக்கும்
தென்றலும்
எங்களூரில்
கவிபாடும்...

பொட்டல் வெளிகளும்
தென்னங் காணிகளும்
தெவிட்டாத இன்பமாகும்
எமக்கு தெம்மாங்கு பாடலாக...


புளுதிக்காட்டிலும்
வெய்யிலின் சூட்டிலும்
சிறகடித்து திரிந்தோம்
சுதந்திர பறவைகளாக...


ஏழைகள் தான்
ஆனாலும்
அன்பிலும்- மகிழ்விலும்
குறைந்துவிடவில்லை நாம்...

  
ஆனால்
விதியின் சதியோ
இல்லை அதுதான்
எம் விதியோ...

பிறந்த மண்விட்டு
தவழ்ந்த நிலம் விட்டு
தாயின் உறவிழந்து
தறிகெட்டு தள்ளாடினோம்..

வயல் நடுவில்
சுவாசித்த
சுதந்திர காற்றெங்கே..?


சிரித்து மகிழ்ந்து
சுற்றிவந்த
தென்னந்தோப்பெங்கே..?


புளுதிகாட்டில்
துள்ளிக்குதித்த
பொட்டல் வெளிகள் எங்கே..?


இத்தனையும்
எண்ணிய என்னுள்ளே
பெருமூச்சொன்றே
பதிலானது...

மனதினில்
பழைய நினைவுகள்:
விழியில்
சில நீர்துளிகள்...

நீண்டகால
இடைவெளியின் பின்
சொந்தமண்ணின் வாசனை...

சிலிர்க்கிறது
நெஞ்சம்..

முன்னைய நினைவுகளுடன்
தவழ்ந்த இடம் தேடி
ஓடுகிறேன்..

அங்கே
எனக்காய்
காத்திருக்கிறது
பார்த்து மகிழ யாரும் இல்லாத
பாழடைந்த என் -
கிராமத்து வீடு மாத்திரமே...!



Sunday, December 11, 2011

தொலைந்தேபோயின..


இனிய நினைவுகளின்
வழியே
இதயத்தை ஆற்றுகின்றேன்...
உள்ளத்தின் மௌனத்தில்
கவியாய்
மலர்கின்றேன்...
மௌனமான
என் சோகங்கள்:
மனதறியா
புன்னகைகள்:
விழிகளில்
தெறித்த கனவுகள்
என்னை விட்டு
தொலைந்தேபோயின
இன்று...!!!



Saturday, December 10, 2011

உள்ளத்து உணர்வு..!



ஏதோ
தெரிந்த பயணங்களில்
தொலையாத
ஓர் சோகம்..

 
விழிகளிலே
என்றும்
விலகாத
கனவுகள்...

 
உள்ளத்தில்
எழும்
எண்ணங்கள்
ஏக்கங்களாய்
எஞ்சி நிற்கும்...

 
சில பொழுதுகளில்
என்னையும் அறியாமல்
உள்ளத்தின்
விம்மல்கள்
கவிகளாய்
வெளித்தோன்றும்..

 
ஆனால்
அதற்கான
உனது கேள்விகளுக்கு
பதில் தெரியாது
மீண்டும்
உள்ளத்திலேயே
உறைந்திடும்...!

Friday, December 9, 2011

கண்ணீர் மலர்கள்...



என்
துப்பட்டாவில்
ஏந்திய
கண்நீர்த்துளிகளை
என் தோட்டத்து
மலர்களுக்கு
வார்க்கின்றேன் -
அவையாவது
கலைந்துபோன
என்
கனவுகளை
பூக்கட்டும்
என்பதற்காக...!!!


தொலைக்கப்பட்ட பாசம்..

அதிகாலை
விடிந்தும்
விடியாத
இரவுகள்
பல...

பூபாளம்
கானமிசைத்தும்
கேட்காத
உறவுகள்
பல...


மலரும்
மலரின்
சுகந்தமும்:
சிரிக்கும்
குழந்தையின்
நாதமும்
என்றோ
கசந்துபோனது...


விழிகளில்
ஏக்கமும்:
மொழிகளில்
முனகலும்:
உள்ளத்தில்
விம்மல்களுமே
மிச்சம்...


தொலைந்த
உறவுகளையும்-
தொலைக்கப்பட்ட
பாசங்களையும்
சுமந்தவாறு
நடைபிணங்களாய்
எம் ஜீவன்-
இன்றும் ஏக்கத்தில்...!!!


Wednesday, December 7, 2011

மன்னிப்பாயா....?




மனதளவில்
ஏதோ
வலிகளை சுமந்து
விம்முகின்றது
ஆழ் மனம்...


ஏதோ
என்னையும்
அறியாமல்
காயப்படுத்திவிட்டேன்..


மன்னிப்பு
கேட்கும் நிலை
எனக்கில்லை..


மாறாத
உன் அன்பு
பரிகாசமற்ற
உன் பாசம்..


தாய்
போன்றவன்
 நீ...

உன்
சேயாகியவள்
 நான்..


தவறு செய்தால்
மன்னிப்பாயா..??


வார்த்தைகள்
விம்முகின்றன..
என் கவிகள்
விழி நீர் சிந்துகன்றன..

மொழிகள்
ஊமையாகி
மௌனமாய்
அழுகின்றன...


மௌனமான
இதயத்திலே
உணர்வுகளால்
ஏங்குகின்றேன் -

மன்னிப்பாயா....????
 
 
 



Saturday, December 3, 2011

உனக்காய் என்றும் என் கவி...! --------- ♥



உனக்காய்
என்றும் என் கவி...!
 



ஏதோ எண்ணத்தோன்றுகிறது..

விழிகளின்
ஏக்கங்களில்
உள்ளத்தின் எண்ணங்கள்
கோலமிடுகின்றன-
அவை
மௌனமாய்
அழுகின்றன
எனக்குள்....

நினைவுகளில்

நிலைத்தவன்
நீ..
நிஜங்களாய்
மாறியவன்
நீ..

உள்ளத்தில்

விதையாய் விழுந்து
விருட்சமாய்
எழுந்தாய்...

உன்

புன்னகைகளில்
நான்
மலர்கின்றேன்..

வட்டமிட்டு

துடிக்கும் உன்
விழிகளில்
நான் துளிர்க்கிறேன்..


என்னவனே,

உன் இனிமைதனையே
நான் நாடுகின்றேன்..

எனினும்

என்னால்
நீ வாடுவதா..?
என் வார்த்தைகளால்
உன் உள்ளம்
கசங்குவதா..?

எண்ணமுடியவில்லை

என்னால்-
தாங்கமுடியவில்லை
என் உள்ளத்தால்...

மறுக்காமல்

மன்னிப்பாயா
ஒருகணம்
என்னை...?

உனக்காய்

என்றும் என் கவி...!
 
 

Friday, December 2, 2011

உன்னவனாய்...! ♥



ஸ்னேகிதியே,
என் இதயம்
என்றும்
உன் ஒருத்திக்காய்
மட்டுமே
சொந்தம்...

 
உனக்காய்
இறுதிவரை
வாழ்வேன்..

 
உனக்கான
என் பாசங்களும்-
எனக்கான
உன் ஆசைகளும்
என்றும்
நம்மோடு...

 
நமக்கான
நம்
வாழ்வில்
மகிழ்ச்சியையே
காண்போம்
எப்போதும்...

 
உனக்காய்
என்றும்
இவன்..-
உன்னவனாய்...!


Thursday, December 1, 2011

விடியல் என்றோ...??



எங்கோ அனைத்தையும்
மறந்து சிறகடிப்பாள்
அவள்...

ஆனாலும் சில பொழுதுகளில்
இல்லை இல்லை..
பல பொழுதுகளில்- அந்த
சிறகு ஒடிந்து போய்விடுகிறது.

பிரிய முடியாத
சோகத்துடன் மீண்டும்
விழிகள் கனத்திடும்...

புரிய மறுக்கும் உறவுகளும்-
தெளிய மறுக்கும் உண்மைகளும்
ரணமாகும் அவள் வாழ்வில்...

-----------------------------------------

எனினும் அந்த காயங்களின் மருந்தாக ஒருவன்...
அவளது அன்பின் தேடல் -
அவனிடத்தில் தான் முக்தி பெற்றது...!

அந்த ஒருவனால் இன்று அவளிடம்
பல உறவுகள்- அன்பின் சொந்தங்களாய்
அவளிடம்..!

------------------------------

எனினும் அவள் விழிகள்
கனத்திடும் வேளைகள் தான்
பல..

அவனுடன் இருக்கும் -
அவன் நினைவில் வாழும்
நிமிடங்களைத் தவிர..

மௌனங்களே
சுகமாகி
மனதினில்
வலிகளை
சுமக்கின்றாள்..

வேதனைகள்
புதிதிதல்ல
அப் பேதைக்கு...!

வெளியே
யாராலும் புரிய முடியாது
அவள்
ரணங்களை - அவனைத் தவிர...

அவள்
தலையணைக்குத்தான்
தெரியும்- அவள்
விழி நீரின்
கனம்
என்னவென்று..

இத்தனை
வருடங்களாக
அவள்
விழி நீரை தாங்கியது- துடைத்தது
அத் தலையணையென்பதனால்...

 நான்கு சுவரின் நடுவிலே
மௌனமாய் அழும் அவள்
இதயம் - என்றும் விடியல்
காணாத இரவுகளாய்..

------------------------------------------

உதடுகள்
புன்னகைத்தாலும்
உள்ளத்தில்
ரணங்கள்
வடுக்களாகி
வதைக்கின்றது
அவள்
மனதை...

யார் அறிவார் இதை..?
யார் புரிவார் அவள்
ஏக்கத்தை...?

தவிக்கும் தவிப்புக்களும்
தேடும் தேடல்களும்
இப்பொழுது
காத்திருப்பது
அவன்
வருகைக்காய் மட்டுமே..

ஏனெனில்
அவனிடம் தான் உள்ளது
அவளை புரிந்துகொள்ளும்
ஷக்தி...

-------------------------

காத்திருப்பாள்
அவள்
காலமெல்லாம்
அவன்
வருகைக்காய்...!

விடியல் என்றோ...??