Sunday, October 16, 2011

நிசப்தங்களை சுமந்தவாறு...


ஒரு தனிமையின் இனிமையில்
சலனப்படுகிறது இதயம்
மௌனத்தின் சந்தத்தில்
அலைபாய்கிறது ஜீவன்..

நேற்றைய பொழுதின்
நெருடல்களை சுமந்தவாறும்...
இன்றைய பொழுதின்
இனிமைகளில் திளைத்தவாறும்...

ஜீவத்துடிப்புடன்
ஜீவிக்க மறுக்கும் இதயம்
உறவாடும் என்றும்
கவியின் நினைவுடன்...

காலங்கள் மறைந்தாலும்
கனவுகள் கலையாது..
சோகங்கள் மரித்தலும்
காயங்கள் ஆறாதது..

ஆகாயத்தின்
அந்தர வெளியில்
பறக்கத்துடிக்கும் மனம்
நிசப்தங்களை சுமந்தவாறு...

ஆடையற்ற மௌனங்கள்
ஆட்களற்ற வெட்டவெளியில்
நிரந்தர நடனமிடும்
நிர்கதிகளை சுமந்தவாறு...

கண்ணீர் துளிகளோ
இங்கு
கல்லறைப் பூக்களாய்
உதிர்ந்து மலரும்..

இது ஒன்றல்ல
ஜீவகளை இருக்கும் நாள் வரை
தொடர்ந்து....

என்று
முடிவெய்தும்- இத்தேடல்...???
                                                                       

No comments:

Post a Comment