Thursday, October 20, 2011

யாழின் நாதம்..

பிஞ்சு ஒன்றின்
வஞ்சமிலா நெஞ்சம்
வேதனை களையும்
கவிதையின் நாதம்

நீர் சிந்தும்
விழிகள் கூட
கனவின் மடியில்
துயில தொடங்கும்...

வெள்ளை உள்ளம்
வஞ்சமிலா நெஞ்சம்
பஞ்சின் மென்மை
குறு குறு பார்வை...           

கிள்ளை மொழியின்
தமிழின் நாதம்
கொள்ளை கொள்ளும்
உயிரின் ஜீவநாடி வரை..

உன் ஒற்றை விரலின்
தொடுகை தனிலே
உலகையே கட்டி
உனக்காய் தரவேண்டும்..

வெண்ணிலவின்
குளிர் முகம்
அதில்
தாரகையாய்
இரு விழிகள்..

பால் சிந்தும்
புன்னகை
பருவத்தின்
இன்னிசை நாதம்...

மலர்கள்
மலரும்
மழலையின்
மடியில்...

மழலை
ஒன்றின் ஓசை
மரகத
யாழின் நாதம்..

என் இறுதி
பிறப்பொன்றிருந்தால்
மாறவேன்டும் அதில்
உனக்கான ஒரு
மழலையாய்...!




                                                                       

No comments:

Post a Comment