Saturday, October 22, 2011

இவள்....!



காத்திருப்பவள் 
உன்னவள் தான்..


உனதான அவள் 
இதயத்தை 
துடிக்க வைப்பதற்காய் 
காத்திருக்கிறாள்... 


காலத்தின் 
கலங்கிய விம்பங்கள் 
உன்னை மட்டும்
தெளிவாய் 
சுட்டுகின்றன... 

காமமற்ற காதலின் 
காத்திருப்பின் 
அர்த்தம் அழகாகிறது 
இங்கு உனக்காய்.. 

மௌனங்களை உனதாக்கி 
புன்னகை மலர்தனை 
உனக்கு சூட்டிட 
காத்திருக்கிறாள் 
இவள்....!

No comments:

Post a Comment