Tuesday, October 18, 2011

காதல்-ஜீவ நாடி...

காதல்..

விழிகளிலே மலர்வது!
இதயத்திலே தவழ்வது!
உணர்வினிலே கலப்பது!
உலகத்தையே ஆழ்வது!

 
இனிய வசந்தம் போல்
வாழ்விலே வருவது!
கற்பைப்போல என்றும்
உண்மையானது!

 
சுற்றும் பூமியின்
சுழ்ற்சியாய் அமைவது!
வீசும் காற்றின்
விந்தையாய் வாழ்வது!

 
அவனதோ அவளதோ
பார்வையின்
உண்மையில் மலர்வது!
உள்ளத்தில் தவழ்வது!

 
இதயத்தின் இணைவினில்
உணர்வுகள் கலப்பது!
இளமையின் கனவினில்
சிறகடித்து பறப்பது!

 
அன்பு மிகுந்தால்
காதல்..
காதல் மிகுந்தால்
காமம்..!

 
காமம் கடந்தால்
புரியும்
காதலின்
புனிதம்!

 
காமம் கடந்த
காதல்-
தெய்வத்தின்
ஜீவ நாடி...

 
உயர் அன்பின்
உண்மைநிலை!
மரித்தாலும் மறையாத
ஜீவகளை!

 
சங்கத்து காதல்
சரித்திரம் படைத்தது!
வங்கத்துக் காதல்
வரலாறு படைத்தது!

 
காதலர்கள்
மறைந்தாலும்
காதல் என்றும்
மறைவதில்லை- மரிப்பதில்லை!

 
உலகம் போற்றும்
என்றும்-
உண்மைக்காதலை!

 
காதல் வாழ்க...!