Saturday, October 22, 2011

உயிர்ப்பு



நீயும் நானும் 
நேசிக்கும் நேசம்
இந்த உலகின் 
உயிர்ப்புக்களில் ஒன்று...
 


மொழிகளின் 
வண்ணத்திலோ 
எண்ணத்தின் 
இனிமையிலோ 
நாம் இணையவில்லை....



உள்ளத்தோடு 
கலந்த நேசம் 
விழிகளிலே கலந்தது....

 

உனக்கான 
எனது இருப்பும் 
எனக்கான 
உனது தவிப்பும் 
காதலின் இனிமையில் 
வஸந்தமானது....
 


வரலாற்றின் 
காதலர் வரிசையில் 
நாம் வேண்டாம்.....
 


உனக்காய் 
நானும் 
எனக்காய் 
நீயும் 
இருந்தாலே 
போதும்....

No comments:

Post a Comment