இது ஒரு தொடர் கதை.
சொல்லாத
சோகத்துள்
கருவாகி
அரும்பானேன்..
தனிமையின்
கரைதனிலே
அலையாகி
துரும்பானேன்..
இளைய என் கனவுகள்
இமைக்க மறந்து போகும்..
துடிக்கும் என் நினைவுகள்
துவண்டு நெகிழ்ந்து போகும்..
நிஜங்களை பிரிந்து
நிழல்களில் வாழ்கின்றேன்..
சுகங்களை மறந்து
சுமைகளை சுமக்கின்றேன்..
சுட்டது விழிநீர்..
பட்டது ரணங்களின் கீறல்..
ஏக்கத்தின் உதயத்தில்
ஏந்திழையாய்
ஏழையிவள்..
கணங்கள் நகரவில்லை..
கவி வடிக்க முடியவில்லை..
காத்திருந்த பொழுதுகளோ
கனவாகிப்போனதிங்கு..
உள்ளத்துள்
புதைந்த சோகம்
உருவமில்லாமல்
சிதைந்துவிடும்..
உருவமுள்ள
விழிநீரோ
உயிரிலே கலந்துவிடும்..
இது ஒரு தொடர் கதை..
சுமைகளை மட்டும் சுமந்திடும்
காலத்தின் கவிதை...!
No comments:
Post a Comment