Saturday, December 31, 2011

மௌனத்துடன்...


கனவுகளின்
தாரகைக்கு
கவிதைகளே
பாடலானது..

மொழிகளின்
இனிமையோ
மௌனத்தில்
கானமிசைத்தது..

மீட்டமுடியாத
ஸ்வரங்களாய்
எண்ணங்கள்
மறைந்துபோயிருந்தது...

ஏக்கங்கள்
மிகுந்த விழிகளில்
சோகங்கள்
பூபாளமிசைத்தது..

சொர்க்கத்தில்
நரகமுண்டோ
இன்பத்தில்
துன்பமுண்டோ..?

தொலைவிலே
தொலைந்துவிட்ட
வாழ்க்கை
பார்த்து நகைத்தது...

விழிநீரும்
வஞ்சிக்கப்பட்ட
இதயமும்
எக்காளமிட்டது...

எனினும்
அந்ததாரகை மட்டும்
அதே மௌனத்துடன்
விடியலை நோக்கியது...!

Sunday, December 25, 2011

போற்றுவோம் பாலனை..!



மண்ணில் உய்த்தான்
மாதவத்தான்!
மானுடர் களைதனை நீக்கி
மறுமையளித்தான்!

புனிதனாய் பூத்தான்
புண்ணியத்தான்!
பூதலம் செழித்தது
புண்ணியத்தால்!


இம்மை வாழ்வின்
இருளை நீக்கி
மறுமை வாழ்வில்
மகிழ்வை விதைத்தான்!

மானுடம் செழித்திட
செங்குருதி நீராக்கி
பூமிதனை நனைத்திட்டான்
புது-யுகம்தனை படைத்திட்டான்!


போற்றுவோம் யேசுபாலனை:
அவன் வழியில்-
உய்திடுவோம்
உலக வாழ்வுதனில்...!

     இனிய நத்தார் திருநாள் நல் வாழ்த்துக்கள்..!!!

Friday, December 23, 2011

நான் மட்டும் இங்கு..



காலங்களின்
காத்திருப்பில்- என்
கவிகளின்
ஜனனம்..

ஏதேதோ
எண்ணங்களால்
ஏமாற்றம்- அது
வழமை...


எண்ணியவை
எண்ணியபடி
கிடைப்பது-இங்கு
நிரந்தரமில்லை...

சோகத்தின்
மடிதனிலே
சுமைகளுடன்
வாழ்கின்றேன்...

சுகங்களைத்
தொலைத்துவிட்டு
விழிநீரில்
நீந்துகின்றேன்....

அவலங்கள்
அனைத்தும்
அடைக்கலமற்று
அலைபாய்கின்றன
இன்று...

என்றோ
தொலைந்த
இனிமைகளை
இன்றும்
தேடியவளாய்
நான் மட்டும்
இங்கு-இன்று...!!!