Sunday, October 23, 2011

'விடியல் தோன்றாக் கனவு'

என்றோ 
ஒரு நாள் 
அந்தியிளம் 
மாலை தனில் 
அழகின் நிலவொழியின் 
மடியில் மயங்கிநின்றேன்..
 







என் 
துயரங்கள் 
துடைக்கப்பட்டனவோ..
துன்பங்கள் 
புதைக்கப்பட்டனவோ..
இனிமைகளும்-செழுமைகளும் 
எனக்காய் 
புதிதாக விதைக்கப்பட்டனவோ..
 


உதய ராகம் 
இசைக்கப்பட்டு 
புதிதாய் 
என் ஜனனம் 
பரினமித்ததோ..
 


உள்ளம் துள்ளியது..
உதடுகள் புன்னகை 
தனை மெதுவாக 
கசிந்தன..
புது  சுகந்தம் 
என்றெண்ணி 
விழிகள் மொட்டவிழ
விடிந்தது 
என் வாழ்க்கை..
 


புதியதாய் 
எழுந்தேன் நான்..
அப்போது தான் 
புரிந்தது..
இன்னும் 
'விடியல் தோன்றாக் கனவு' 
இவை என.. !

அன்பின் கண்ணாளனே..



நிஜங்கள் 
அனைத்தும் 
நீயானாய்...


மெளனங்கள் 
அனைத்திலும் 
இசையானாய்...


சோகங்கள் 
அனைத்திலும் 
சுகமானாய்...



என்னை 
கொள்ளை கொண்டது
உன் 
வெள்ளை உள்ளமே...

அதன் பின்பே 
என் 
விழிகளுக்கு 
விருந்தானாய்...


சோகங்கள் 
மறைந்தது. 
சுமைகள் 
விலகியது. 


உன் பெயர் கூறி 
வசந்தக் காற்று 
எனை வருடியது...


தினமும் உன் 
வருகைக்காய் 
விழிகள் 
ஏங்கியது...


மொழிகள் 
ஊமையாக 
இதயம் 
உன் நாமத்தையே 
ஜெபித்தது 
இன்று...


கண்ணா 
காத்திருக்கிறேன் 
உனக்காக- 
உன்னை சேரும்
நாள் எண்ணி; 
வசந்த வருகையை 
எதிர்பார்த்து....

மீண்டும் 
மழலையாகி 
நான் 
இன்று 
உனக்காக 
பார்த்திருக்கிறேன்...!

உயிர்ப்பற்ற நகர்வு....!



துடித்த உறவுகளும்;
வெடித்து சிதறிய கற்'பனைகளு'ம்;
பசியடங்கா இருளில் ;
புண்பட்டுபோன 
பாவை இதயங்களும் ;
பசி முற்றிப்போன 
பாதக பிண்டங்களும் ;
என்றும்-
அழிக்க முடியாத 
கறை படிந்த 
மெளன அவலங்கள்..... 


சோகங்களை   
சுமையாக்கி ..
விழிநீர் தனை       
மொழியாக்கி ..
நைந்துபோனது 
எம் சொந்தம். .........


கறை படிந்த 
இருளிடையே 
கசியும் கண்நீரில் 
கழுவப்படாத சுமைகளும்- 
சுமக்க முடியாத 
பாவங்களும்-
சுவாசிக்க மரந்து 
சலனமற்றுப்போன
இரவுகளும் ...



காற்றுக்கூட 
குருதி குடிக்கும் 
காலங்களாய்                                    
மாறி    நிற்க 
நிர்கதியானது 
மானுடம். ...


அவல ஓசைகள் 
நிசப்த அலைவரிசையினிடயே 
ஒலிபரப்பாகிட 
நாளையாவது 
விடியுமா 
என எங்கும் 
இங்கு மானுடம்-
மீண்டும் 
தொடரும் 
தனது 
உயிர்ப்பற்ற நகர்வினை ..!


Saturday, October 22, 2011

புனிதம்...



ஏதேதோ  
சோகங்கள்
என்னுள்ளே...
 

ஆனாலும்
அந்த 
சோகத்திலும்
சுகந்தமாய்
வந்தவன்
நீ...


உன்னால் தான்
சோகத்தை மறக்கிறேன்...
கண நேரத்திலாவது
சுகங்களை
சுகிக்கிறேன்...

சுவாஸத்திலும்
உன்
நினைவு..
உணர்வின்
துடிப்பிலும்
உன்
ஜீவன்...


உன்னை
மட்டும்
தேடிய
பயணம்
இது..

 

உனக்கான
வாழ்வின்
புனிதம்
இவள்
கவி...



புனிதம்
மண்ணில்
புதையும் முன்பே
சூடிடு- உன்னைச்
சூட்டிடு...