Saturday, February 12, 2011

எம்மவர்கள் ......



என்னதான் அதிகாலை அழகாய் விடிந்தாலும் .....


ஏக்கங்கள் மிஞ்சிப்போன வாழ்வுதானே எம்மவர்க்கு .....


ஏழையின் கதறல் கூட ஆண்டவனுக்கு கேட்கவில்லை போலும் ....


ஏமாற்றங்களை கொடுத்து இரவலர் ஆக்குகிறான் ....


ஏனோ இயற்கைகூட எட்டி உதைக்கிறது


எம்மவர்களோ இன்று வாழ்கையிலும் விழியிலும் நீரை சுமந்தபடி .....

Sunday, February 6, 2011

கனவுகள் ...




நான் நினைவினில் கண்ட கனவுகள் ...
என்றுதான் நிஜங்களாய் மாறிடும் ....
நினைவினில் வாழ்ந்த வாழ்க்கை ....
என்று என் கையில் வந்து நிலைத்திடும் ....???

Friday, February 4, 2011

நட்பு...



நட்பு என்பது ...
நன்மை தரக்கூடிய உறவு ...
தீயவற்றை நீக்குவது ..
தித்திப்பை தருவது ...
துரோகிகளை துவம்சம் செய்வது ....
மொத்ததில் நட்பு நம் உயிரிலும் மேலாகி இந்த உலகத்தை ஆழ்வது ....

Thursday, December 9, 2010

க'விதை' ----......

கவிதை என்பது...
களங்கமற்ற பல
கனவுகளின் வாயில்..........

உணர்ந்து கவியியற்றினால்
உண்மையான அதன்
உயிர்ப்பு புரியும்........

இதயத்தின்
இனிமையையும்
இவ்வுலக துயரத்தையும்
இயல்பாய் கூறும் கவிதை...

க'விதை'  ----
கருத்தை விதைத்து
கருவை வளர்ப்பது....

கனவுகளை சிதைக்காதீர்...
கவிதையை பிரதியாக்காதீர்...
கண்களில் நீர்தனை
களமாக்கி செல்லாதீர்..

கவியை திருடுவது...
கல்நெஞ்சக்காரர் செயல்...
தாயின் அமுதத்தை
பிழிந்தெடுக்கும்
ஈனச் செயல்...

எமது உயிரை,
உயிர்ப்பை
எடுத்தெறிந்து
அழிக்கும் செயல்...

இதைவிட
எம்மை
உயிரோடு
புதைத்துவிடுங்கள்.....

ஆனால்...
எம் உயிர்நாடியை
எம்மிடமிருந்து
பிரிக்காதீர்கள்..

சுய உணர்வுகளை
சுதந்திரமாய் பயன்படுத்தி
இயற்றுங்கள் உங்கள்
இளமைக் கவியை...
பிரதி செய்யாதீர்..
எம் ஜீவ கவியை...!!!