அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Sunday, July 22, 2012
கவி..
கரம் சேர்த்து
கைகோர்த்து
கவிதைகள் பாடிய
கனவு நாட்களே
இன்று கவியானதே..!
உனக்காய்...
கண்கள் கதைபேசி
கைகள் ஸ்பரிசித்த
கனவு நாட்களை
பரிசளித்திருக்கிறாய் நீ-
எனக்காய்..
அவற்றை
ஸ்வாசித்தபடி நான் -
உனக்காய்...!
நினைவுகளினால்...
உடைந்து விழும்
கண்ணீர்த்துளியிலும்
உருக்குலைந்தோடும்
உள்ளத்து நினைவுகளிலும்
தெள்ளத்தெளிவாய் தெருகிறாய்..
மீண்டும் மீண்டும்
நெருங்குகிறாய்-என்
நினைவுகளினால்..!
யாசகம் ..
விழிகள் மூடி
உன்னை யாசிக்கின்றேன்..
யாசகனே எனக்கோர்
யாசகம் தருவாயா..?
என்றும்
உன்னருகிலிருப்பதற்காய்...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)