Wednesday, May 16, 2012
Tuesday, May 15, 2012
உன்னை கண் தேடுதே....
விழியோரம் நீர் கசிந்து
விழிகள் நனையுதே..
சூழ்ந்துவிட்ட தனிமையும்-
மறந்துபோன இனிமையும்
மாசற்ற உன் அன்பில்
நேசம் காணுதே..
உன்
அன்பான காதலும்
பண்பான நேசமும்
தேகம் விட்டுச் சென்றாலும்
என்னுள் வாழுமே..
மன்னவனே,
உந்தன்
மார்பினில்சாய்ந்தபடி
மனதில் உன்
இனிமை சுமந்து
என்
மூச்சுக்காற்றைநிறுத்திட தோணுதே..
வைகறையினிலும்
அந்தி சிந்தும் வேளையிலும்
அன்பனே
உந்தன் முகம்
பார்த்திட ஏங்குதே...
தொலைவான
வாழ்க்கையெண்ணி
தொலைந்துபோன
சோகங்களை தொட்டெடுத்து
உன்னோடுவாழ்ந்திட எண்ணுதே..
தினம் தினம்நாடும்
திவ்ய தரிசனமாய்
தித்திக்கும் உன் முகம்
என்னுள் மலருதே..
ஏக்கங்கள்
கூடிநிற்க
என்னுள்ளே
பல கனவு
பார்த்து-காத்து இருக்கையிலே
உன்னை கண் தேடுதே...!!!
Tuesday, May 1, 2012
சபிக்கப்பட்ட வாழ்க்கை...
விழிகளின்
தொலைவுகள்
வழியே
கனவுகளின்
காலஎல்லை..
மௌனத்தின்
ஸ்வரத்தினிலே
மாயத்தின்
மனவலைகள்..
வாழ்வியலில்
தொலைந்த
வசந்தம்
மீண்டும்
பூக்குமென
எண்ணங்கள்...
சிதைக்கப்பட்ட
நினைவுகளில்
சித்திரமாய் பல
வலிகள்...
காலத்தின்
வேதனையில்
கவிகளின்
காதல் இங்கே..
மௌனித்த நாதத்துள்
இசைக்கீறலாய்
ஓர்
அழுகுரல் ஒலித்திட...
விதி எனும் விதைக்குள்
அறையப்பட்ட ஆணியாக
நகர்கிறது
இந்நாட்கள்..
நிர்க்கதியாகி
நடைபிணமான
உடலைச் சுமந்து
காட்டுவழியில் ஓர்
பயணம்..
இசையாகிக் கசிவதற்குள்
விறகாகி தணலான
மூங்கில் களியொன்று
மூர்ச்சையாகிறது இங்கு..
விதைக்கப்பட்ட விதைகள்
முளைகளிலே கருகிப்போக
சப்பித் துப்பப்பட்டு
சபிக்கப்படுகிறது இங்கே ஓர் வாழ்க்கை...
Sunday, April 22, 2012
காலக்கண்ணாடியில் பிரிவு...
பிரிவு-
பிரிவு என்ற வார்த்தைகள்
எம்மில் எழுதிச்சென்ற
கவிதைகள் பல..
மௌனத்தின் சங்கீதத்தில்
ஜனன கீதம் இசைக்கிறோம்..
இனிக்கும் நினைவுகளில்
துயரத்தை சுமக்கிறோம்..
காதல் கீதங்கள்
கனவினை சுமந்துநிற்க-
கனவின் சோகங்கள்
மலர்களாய் பூத்திருக்க
பிரிகின்றோம் நாம்
மீண்டும்
எங்காவது சந்திப்போமென...
ஒலிக்கும்
இசைகூட
மௌனமாய்
சபிக்கப்படுகிறது
எமக்குள்..
பார்வைகளின்
பரிதவிப்பு
படபடப்புடன்
தொட்டுச்செல்கிறது..
நினைத்துச் சென்ற
எண்ணங்கள்
வண்ணங்களாய்
மாறி
அழியாத
ஓவியமாகிறது
மனச்சுவரினிலே..
பிரிவு..பிரிவு
எண்ணிய
எண்ணங்களை
காலக்கண்ணாடியின்
ஓரத்திலே
படரவிடப்போகும்
ஓர்
தொலைக்கப்பட்ட
இன்பச்சிதறல்...
தொலைந்தோம்..
தொலைக்கப்பட்டோம்...
மீண்டும்
என்றோ
இணைவோம்
என்பதனால்..
Subscribe to:
Posts (Atom)




