Wednesday, December 7, 2011

மன்னிப்பாயா....?




மனதளவில்
ஏதோ
வலிகளை சுமந்து
விம்முகின்றது
ஆழ் மனம்...


ஏதோ
என்னையும்
அறியாமல்
காயப்படுத்திவிட்டேன்..


மன்னிப்பு
கேட்கும் நிலை
எனக்கில்லை..


மாறாத
உன் அன்பு
பரிகாசமற்ற
உன் பாசம்..


தாய்
போன்றவன்
 நீ...

உன்
சேயாகியவள்
 நான்..


தவறு செய்தால்
மன்னிப்பாயா..??


வார்த்தைகள்
விம்முகின்றன..
என் கவிகள்
விழி நீர் சிந்துகன்றன..

மொழிகள்
ஊமையாகி
மௌனமாய்
அழுகின்றன...


மௌனமான
இதயத்திலே
உணர்வுகளால்
ஏங்குகின்றேன் -

மன்னிப்பாயா....????
 
 
 



Saturday, December 3, 2011

உனக்காய் என்றும் என் கவி...! --------- ♥



உனக்காய்
என்றும் என் கவி...!
 



ஏதோ எண்ணத்தோன்றுகிறது..

விழிகளின்
ஏக்கங்களில்
உள்ளத்தின் எண்ணங்கள்
கோலமிடுகின்றன-
அவை
மௌனமாய்
அழுகின்றன
எனக்குள்....

நினைவுகளில்

நிலைத்தவன்
நீ..
நிஜங்களாய்
மாறியவன்
நீ..

உள்ளத்தில்

விதையாய் விழுந்து
விருட்சமாய்
எழுந்தாய்...

உன்

புன்னகைகளில்
நான்
மலர்கின்றேன்..

வட்டமிட்டு

துடிக்கும் உன்
விழிகளில்
நான் துளிர்க்கிறேன்..


என்னவனே,

உன் இனிமைதனையே
நான் நாடுகின்றேன்..

எனினும்

என்னால்
நீ வாடுவதா..?
என் வார்த்தைகளால்
உன் உள்ளம்
கசங்குவதா..?

எண்ணமுடியவில்லை

என்னால்-
தாங்கமுடியவில்லை
என் உள்ளத்தால்...

மறுக்காமல்

மன்னிப்பாயா
ஒருகணம்
என்னை...?

உனக்காய்

என்றும் என் கவி...!
 
 

Friday, December 2, 2011

உன்னவனாய்...! ♥



ஸ்னேகிதியே,
என் இதயம்
என்றும்
உன் ஒருத்திக்காய்
மட்டுமே
சொந்தம்...

 
உனக்காய்
இறுதிவரை
வாழ்வேன்..

 
உனக்கான
என் பாசங்களும்-
எனக்கான
உன் ஆசைகளும்
என்றும்
நம்மோடு...

 
நமக்கான
நம்
வாழ்வில்
மகிழ்ச்சியையே
காண்போம்
எப்போதும்...

 
உனக்காய்
என்றும்
இவன்..-
உன்னவனாய்...!


Thursday, December 1, 2011

விடியல் என்றோ...??



எங்கோ அனைத்தையும்
மறந்து சிறகடிப்பாள்
அவள்...

ஆனாலும் சில பொழுதுகளில்
இல்லை இல்லை..
பல பொழுதுகளில்- அந்த
சிறகு ஒடிந்து போய்விடுகிறது.

பிரிய முடியாத
சோகத்துடன் மீண்டும்
விழிகள் கனத்திடும்...

புரிய மறுக்கும் உறவுகளும்-
தெளிய மறுக்கும் உண்மைகளும்
ரணமாகும் அவள் வாழ்வில்...

-----------------------------------------

எனினும் அந்த காயங்களின் மருந்தாக ஒருவன்...
அவளது அன்பின் தேடல் -
அவனிடத்தில் தான் முக்தி பெற்றது...!

அந்த ஒருவனால் இன்று அவளிடம்
பல உறவுகள்- அன்பின் சொந்தங்களாய்
அவளிடம்..!

------------------------------

எனினும் அவள் விழிகள்
கனத்திடும் வேளைகள் தான்
பல..

அவனுடன் இருக்கும் -
அவன் நினைவில் வாழும்
நிமிடங்களைத் தவிர..

மௌனங்களே
சுகமாகி
மனதினில்
வலிகளை
சுமக்கின்றாள்..

வேதனைகள்
புதிதிதல்ல
அப் பேதைக்கு...!

வெளியே
யாராலும் புரிய முடியாது
அவள்
ரணங்களை - அவனைத் தவிர...

அவள்
தலையணைக்குத்தான்
தெரியும்- அவள்
விழி நீரின்
கனம்
என்னவென்று..

இத்தனை
வருடங்களாக
அவள்
விழி நீரை தாங்கியது- துடைத்தது
அத் தலையணையென்பதனால்...

 நான்கு சுவரின் நடுவிலே
மௌனமாய் அழும் அவள்
இதயம் - என்றும் விடியல்
காணாத இரவுகளாய்..

------------------------------------------

உதடுகள்
புன்னகைத்தாலும்
உள்ளத்தில்
ரணங்கள்
வடுக்களாகி
வதைக்கின்றது
அவள்
மனதை...

யார் அறிவார் இதை..?
யார் புரிவார் அவள்
ஏக்கத்தை...?

தவிக்கும் தவிப்புக்களும்
தேடும் தேடல்களும்
இப்பொழுது
காத்திருப்பது
அவன்
வருகைக்காய் மட்டுமே..

ஏனெனில்
அவனிடம் தான் உள்ளது
அவளை புரிந்துகொள்ளும்
ஷக்தி...

-------------------------

காத்திருப்பாள்
அவள்
காலமெல்லாம்
அவன்
வருகைக்காய்...!

விடியல் என்றோ...??