Sunday, October 23, 2011

மரணித்தலின் ஒவ்வொரு கணமும்..



உன்னருகில் 
நானிருந்தால்
என் 
விழிகளுக்கு 
உன்னை தவிர 
வேறு எதுவுமே 
தெரிவதில்லை... 


நீ 
என்னை 
பார்க்கிறாய் 
என்பதை 
உணராதவள் 
அல்ல நான்..

 
எனினும்
விழிகளை 
உயர்த்தி 
உன்னை 
பார்ப்பதற்கு 
என்னுள் 
சக்தி எழுவதே 
இல்லை..

உன் 
ஒவ்வொரு 
அசைவுகளும்
சிதறடிக்கும் 
என் மனதை...

 
நீ
எங்கோ 
பார்க்கையில் 
உன்னை 
நாணத்துடன் 
பார்க்கும் 
என் 
விழிகள் 
உன் 
கன்னக்குழி அழகில் 
மோதி சிதைந்து போகும்..
 

உன்னை உரசும் 
காற்றுதேவன் 
என்னை 
மோதும்போது 
உடல் சிலிர்த்து நிற்கும்..
உன் கரத்துடன் 
என் கரம் 
ஸ்பரிசித்த போது 
புதிதானேன் நான்..

 
மரணித்தலின் 
ஒவ்வொரு 
கணமும் 
என் 
ஜனனம் 
உன் மடியில்...!

தமிழே செல்...



விழிநீர்களே 
துணையாகும்...
 

அந்தவகையில்
உனக்கான 
என் 
சில மொழிகள்..
 


என் 
சுயத்தையே
உனக்காக 
நான் 
இழக்கதயாராக 
இருக்கும் பொழுது
உன்மேல் 
தவறு என்று 
நான் 
ஒரு போதும் 
நினைத்ததில்லை...
 


அனைத்தும்
என்னில் 
உள்ள தவறு 
என்பது நிதர்சனம்..
 


மறக்க 
முடியவில்லை 
உன் 
ஒவ்வொரு 
வார்தையின் வலியையும்..
 
என்னால்
நீ 
காயப்பட்டதனால்...
 

நான் 
எடுத்த ஒரு முடிவு..
 

எனக்கு 
என் 
சுயநிலை
தேவையில்லை..
 

அதனால்
தமிழே
எனை 
நீங்கி 
செல்லட்டும்..
 

உனக்கான 
என் 
கடைசி வரிகள் இவை..!
 
மன்னிப்பாயா..!


''மீண்டும் மௌனங்கள் அழுகின்றன..!''



எதற்கோ 
மனது 
தவிக்கிறது..


எதையும் 
புரிய 
மறுக்கிறது....


அன்று 
செய்த 
தவறிற்கு 
இன்றும் 
தண்டனையா? 
புரியவில்லை
எனக்கு.... 


எதற்கு 
இந்த 
மாற்றம்? 
எதற்கு
இந்த 
சோகம்? 


புன்னகை மலர்கள் 
என்னிடமிருந்து 
உதிர்ந்துபோன 
மாயமென்ன.. ? 


மௌனம் கூட 
வலிக்கிறது. 
விழிகள் இங்கு 
கனக்கிறது. 


நேரங்கள் 
எங்கோ தூரமாகிட- 
உறைந்து போனது 
எனது இதயம்..
 


நான் 
உன் 
மனமெனும் 
மலரை கசக்கிவிட்டேனா?
மன்னிப்பாய் 
கண்ணா 
உன் மழலை 
மொழியால்...
மீண்டும் மௌனங்கள் 
அழுகின்றன--எனக்குள் சத்தமாக...!!


இங்கே ஒரு குட்டி இளவரசி...!




அபலை
இவள் புலம்புகிறாள்..
அணைப்பதற்கோ 
யாருமில்லை..
 


பெற்ற உறவுகள் 
சுமையாக..
உற்ற உறவுகள் 
பகையாக..
நட்பின் உறவுகள் 
நலிந்துபோக
நடை பினமாகியது 
இவள் வாழ்க்கை..
 


புன்னகையை 
மறந்து 
விம்மி வெடிக்கும் 
இவள் 
இதயம்..
 


உயிர்ப்பின் 
துடிப்பில் 
துயரத்தை 
சுமந்தவாறு 
இவள் 
ஜனனம்..
 


விழிநீரின் 
வழியே 
இவள் 
அவலம்..
 


என்றோ 
ஒரு நாள்
இவை எல்லாம் 
களையப்படும்..
 


7 குதிரைகள் 
பூட்டிய தேரில் 
வருவான் ராஜ குமாரன்...
 


இவள் 
விழிநீர் தனை 
இதழ்களால் 
களைவான்...
 


காதல் தேவனை 
எதிர்பார்த்து 
கவலைகளை 
தன்னுள் 
புதைத்தபடி 
காத்திருக்கிறாள்-
இங்கே 
ஒரு குட்டி இளவரசி...!