Friday, October 14, 2011

மெளன நிலை…

இரவு வானின் நிசப்தவேளைகள்
இதயத்தின் சலனத்தை
இம்சித்து எழுப்பும் வேளை..
கவிகளின் தாற்பரியமும்
கனவுகளின் சிதறல்களும்
நிலைகுலைந்து நிர்க்கதியாகும் வேளை..
சுடர்விட்ட விண்மீன்களும்    
ஒளிதந்த குளிர் நிலவும்
சுடரற்று- ஒளியற்று போய்விட
சுவாசிக்க மறுத்த இதயமும்
புன்னகை மரத்த இதழ்களும்
நிலை குலைந்துபோன உணர்வுகளும்
மெளனமான கவிவழியே புலம்பும் நிலை…

Wednesday, October 12, 2011

கவியின் கனவு.

கனவுகளே சுமையாகி
கவியியற்றும் பொழுது இது!
எதிர்பார்ப்புக்கள் ஏக்கமாகி
விடியலை நோக்கும் உறவு இது!

ஏதோ பல எண்ணங்களையும்
ஏதோ பல சோகங்களையும்
தன்னுள் கனவுகளாக்கி
கலங்க நிற்கும் எம்முறவு...!

சுகங்கள் என்பதை சுமைகளாக்கி..
சுமைகள் பலவற்றை கவியாக்கி..
துயர்படிந்த கறைகளை
விழிநீரால் கழுவும் நிலை..!

எழுந்திடு தோழா,
உயர்ந்திடு!
நாளை உனது!
கவிபடைக்கும் உன் கரங்களின்
கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்..!!!
                                                                       

Tuesday, October 11, 2011

விடியும்....!


அதிகாலை விடியும் போது 
விழிகளிலே பல ஏக்கங்கள்
தொலைவினில் எரியும் சூரியனும்
துவண்டதுபோல் ஒரு நினைவு...


காத்திருந்த காலங்களில்
கனவுகள் கலைந்த கோலங்கள்
கோலங்கள் கலைந்த சோகங்களில்
விழிகளின் வழியே விதைத்துளிகள்..


புன்னகை பூத்த உதடுகளோ 
இன்று சொல்ல மறந்த பல கதையை
கவிதைகளாக்கி முனகிட 
புலம்பல்களே துணையானது...


என்று விடியும் இந்த வாழ்வு?
என்று மலரும் இங்கு வசந்தம்?
நாளைய விடியலின் ஏக்கத்துடன்
நலம் மறந்த இவ் உறவு...!

Monday, September 26, 2011

எதிர்பார்த்தவாறு..!!!

காத்திருப்புகள்
கவி படைத்திட;
கனவுகளோ
சுமை படிந்திட;
விழிநீர்களே துணையாகும்..

இறந்த காலத்தின்
எச்சங்களும்;
நிகழ்காலத்தின்
மிச்சங்களும்
எதிர்காலத்தை
ரணமாக்கும்..

வீசும் காற்றுக்கூட
விதையாய் மாறும்
சக்தி பூமி
இது...

இன்று
சுகிப்பாரற்று
சலனமின்றி
துயில்கிறது...

என்றோ
புலரப்போகும்
விடியலை
எதிர்பார்த்தவாறு..!!!