Monday, September 26, 2011

பெண்மை

நீ இல்லாதபொழுதுகள்
என் உள்ளத்தை உருக்கிநிற்க
காமத்தையோ-ஸ்பரிசத்தின் இன்பத்தையோ
எதிர்பார்கவில்லை நான் உன்னிடமிருந்து...
உன் களங்கமற்ற அன்பொன்றே போதும்...
எனினும்,
உன்னருகில் நானிருக்கும் நேரங்களில்
எனக்கான உனது வருகையும்;
உனக்கான எனது காத்திருப்பும்-
உன் ஸ்பரிசங்களும்
உன் ஸ்வாசத்தின் தீண்டல்களும்
என்னைக் கொல்கிறதே...
பெண்மையின் மௌனமும்
வெட்கத்தின் அர்த்தமும
புரிகிறது இப்போது..
உன் தீண்டல்களின் வசந்தத்தில்
நான் மலரும் நாள் எப்போது....?

Friday, June 24, 2011

கனவுகள் ...

கண்களை விழித்து பார்த்தேன்
கனவுகள் கலைந்தன
என்னுள்ளே..

Thursday, June 23, 2011

விழிகளில்
வலிகள் இருந்தாலும்
அவை
உன்
மொழி கேட்டால்
வரமாய்
ஆகுமே
நண்பனே...!

Friday, May 20, 2011

வெற்றி நிட்ச்சயம்.....

தமிழா ....
வீறுகொண்டு எழு ...
தாழ்த்திவிடாதே தலை ...
தறிகெட்டு தளம்பிடாதே
துணிந்து செல் ...
...துரத்தி முன்னேறு ..
துரதிஷ்டமான இன்னல்..
உனக்கொரு பாடம் ...
என்றும் வெற்றி உனக்கே ...
ஜெயித்திடு தமிழா ...
வெற்றி நிட்ச்சயம் ...
ஜெயம் உனக்கே ...!
''வாழ்க தமிழ் ....!!!''